சித்தர்கள் வரலாறு

காலத்தை வென்று மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், ரசவாதத்தினால் இரும்பைப் பொன்னாக்கியும், கூடு விட்டு கூடு பாய்ந்தும், மூச்சடக்கி மனித விமானங்களாக வானத்தில் பறந்தும், நவக்கிரகங்களை வசப்படுத்தியும் பலவாராக சாதனைகளைப் புரிந்த சித்தர்கள் தமிழ் மற்றும் இந்திய மண்ணின் பொக்கிஷங்களாகப் போற்றப் பட வேண்டியவர்கள்.

இவர்கள் இயற்கையோடு இயைந்து அதனைக் கருவியாகப் பயன்படுத்தி பல அற்புதங்களைச் செய்திருக்கிறார்கள். வெறும் சித்து விளையாட்டுகளோடு நிற்காமல், யோகம், ஞானம், வைத்தியம் போன்ற பல அரிய விஷயங்களை உலக நன்மைக்காக அருளிச் செய்திருக்கிறார்கள்.

சித்தர்கள் பற்றி அறியத் துடிக்கும் நல் இதயங்களுக்கு என்னால் இயன்றவரை சில புத்தகங்களின் மூலம் சேர்த்து வைத்ததை இந்தப் பதிவுகளில் 18 சித்தர்களின் வரலாறு, அவர்கள் இயற்றிய நூல்கள், அவர்களை பூஜிக்கும் முறை, பூஜா பலன்கள் ஆகியவைகளை வரும் பதிவுகளில் பதிந்துள்ளேன்.

நன்றி. – கவிப்ரியன்.

1 comment: