குண்டலினி தியானம்

ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ண ஸுமனி ப்ரேதே விதாநப்ரபே பிரஹ்மாதி ப்ரதிமாதி கீலித ஷடாதாரப்ஜ கக்ஷோத்ததே! பிரஹ்மாண்டாப்ஜ மஹாஸ்னே ஜனனிதே மூர்த்திம் பஜே சின்மயீம் ஸுஷும்னாயத பீதயகஜ மஹக மத்ய திரிகோண..
"அ" முதல் "க்ஷ" வரை எழுத்துகளாகும்.. முத்துக்கள் அமைந்த விதானத்தின் கீழ் பிரும்மா முதலியவரிகள் விளங்கும் ஆறு ஆதார வரிசைகளுக்கு மேல் பிரம்மாந்திர தாமரை ஆசனத்தில் முக்கோணத்தில் விளங்கும் ஞானமயமான உன் வடிவத்தினை தரிசிக்கிறேன். - ஸ்ரீ சக்தி மஹிம்ன ஸ்தோத்திரம்.
மூலாதாரத்திற்கு கீழே உள்ள குல சகஸ்ரார மத்யம் மஞ்சள் நிறம்; அங்குள்ள முக்கோணம் அ - க - த - ஆஸனம். இங்குள்ள குண்டலினி சக்தியைக் கிளப்பி சிரஸின் உச்சியிலுள்ள அகுல சகஸ்ராரத்திற்கு அழைத்து வந்து தியானம் செய்வது சிவயோகம். மூலாதாரத்திற்கு கீழுள்ள சூல ஸகஸ்ராரம் சிவப்புத் தாமரையாகக் கூறப்படுவதுண்டு. குண்டலினி உறங்கும்போது இது மஞ்சள் நிறம். விழிப்படையும் போது இதுவே சிவப்பு நிறமாக மாறுகிறது.
குண்டலினியைத் தியானத்திது வந்தால் அறிவு, உயிர் பேரியக்க மண்டலம் ஆகிய இம்மூன்றுக்கும் பிறப்பிடம் உணர்ந்து அறிவை நிறை நிலையில் ஒன்றிப் பழகி வந்தால் தனக்குள்ளாகவே இவ்வுலகம் முழுவதும் அடங்கி காணும் நிலை ஏற்படும். இதுவே தான் தன்னை அறிவது (தத்வமஸி).
"சொன்ன நன் முதலாஞ் சுழுமுனையின் மேரு பற்றி
வன்னியை எழுப்பிக் காலால் மனம் வைத்து ஓராண்டு நோக்கில்
பொன்னின் வடிவதாகும் புகழ்ந்திடும் அணுவும் ஆகும்
அன்னத்தின் தெய்யாநாகம் அஷ்டமாசித்தியாகும்."
குண்டலினி சக்தியை உச்சந்தலையில் வைத்து தியானித்து வந்தால் மூளைக் கபாலங்கள் செயல்பட்ட ஆரம்பிக்கும் வாழ்நாளில் எந்த எந்தப் புலன்கள் மூலம் செயலாற்று அனுபவம் பெற்றிருக்கிறோமோ அந்த அனுபவப் பதிவுகள் விகிதாசார வலுவோடு அமைந்து மனத்தின் தன்மையாக விளங்கும் திறன் உடையன. அறியாமல் செய்த விளைவுகளும். இந்த பழைய பதிவுகளை மாற்றி புதுப்பிக்கும் ஆற்றல் இதற்குண்டு.
மிக நுண்ணியக்க நிலையில் அறிவு, சிரசில் நிற்கப் பழகுவதால் விஞ்ஞான மய கோச நிலையை இயல்பாகவே பெறுகிறது.
சிரசிற்கு மேல் 12 அங்குலம் மேலுள்ள துவாதசாந்த பெரு வெளியில் குண்டலினி சக்தியை ஹ்ருதயம், தொண்டைக்குழி, நெற்றி, உச்சந்தலை, சகஸ்ராரப் பெருவெளி, இவ்விடங்களில் நிறுத்துவது தாரணை எனப்படும்.
ஆக்ஞையில் குண்டலினி சக்தியை வைத்து நினைத்து வந்தால் உயிராற்றல் மீறிச் செலவாகா. அவ்வாற்றல் வேண்டும் அளவுக்கு சேகரிக்கப்படும். இதனால் உடம்புக்கு எந்தவித நோய்களும் வராது. நினைவாற்றல் பெருகும்.
இந்த புருவ மத்தியே ஞானசபை சிற்றம்பலம்.
"நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி
உற்றுப் பார்க்க வொளியிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரமன் இருப்பிடம்
சிற்றம்பலம் என்று சேர்த்துக் கொண்டேனே."
- திருமூலர்.

No comments:

Post a Comment