உனக்குள் இருக்கிறது உன்னதம்-8



எனது செயலின் அடிப்படையான நோக்கமே – எந்த ஒரு மார்க்கத்தை மக்கள் பின்பற்றினாலும் அது அடிப்படையில் மனிதகுல மேம்பாட்டுக்குத்தான் என்பதை பல வழிகளில் நினைவுபடுத்துவதாகும். மனிதன் உயர்ந்த நிலையை அடைவதற்குத்தான் ஆன்மிகமே தவிர, குறிப்பிட்ட சில நம்பிக்கைகளோடு தன்னை அடையாளம் காண அல்ல. மனிதம் மதத்தன்மை எய்துகிறான் என்றால், அது அனைத்து மோதல்களுக்கும் ஒரு முடிவாக இருக்க வ்வேண்டும். ஆனால் சுரதிர்ஷ்டவசமாக மதங்களே இன்று அனைத்து மோதல்களுக்கு காரணமாக இருக்கிறாது. மதமே அதிகபட்ச துன்பத்தை இவ்வுலகில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏற்படுத்தி வருகிறது. அடிப்படையில் இவற்றிற்குக் காரணம், மக்கள் தாங்கள் உண்மையென்று உணராத ஒன்றை நம்புவதுதான். சிலர் ஒன்றை நம்பி, மற்றவர்கள் வேறொன்றை நம்பத் தொடங்குகிற போது, இயல்பாகவே மோதல் எழுவதைத தவிர்க்க முடியாது. இன்றோ நாளையோ அவர்கள் மோதிக்கொள்ளத்தான் போகிறார்கள். இடையில் கொஞ்சநாள் மோதிக் கொள்வதைத் தவிர்க்கலாம். ஆனால் என்றாவது மோதிக்கொள்வார்கள். உங்கள் வழிதான் சிறந்தது என்று நீங்கள் நம்பி, தன் வழிதான் சிறந்தது என்று இன்னொருவர் நம்புகின்ற வரையில், மோதல் இருந்து கொண்டுதான் இருக்கும். எனவே அனைத்து மதங்களுமே உள்நிலை நோக்கிய பயணமாகத் தொடங்கினாலும் கூட, ஒரு எல்லைக்கு மேல் அவை திசை திரும்பி, சில ந்ம்பிக்கைகளின் தொகுப்பாகவே மாறிவிட்டன.

மனிதனின் மகத்துவம் குறித்து எல்லா மதங்களும் பேசியிருக்கின்றன. ஆனால், அதே மதத்திற்காக இன்னொரு மனிதன் உயிரை எடுக்கவும் சிலர் தயாரயிருக்கிறார்கள். நிறைய துயரங்களும், மோதல்களும் இந்த உலகத்தில் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. எனவே இந்த அடிப்படை சிக்கல், சரியான பார்வையில் பார்க்கப்படவில்லை என்பது என் கருத்து. எப்போது ஒரு குழுவிற்டும், மறு குழுவிற்கும் நடுவில் தற்காலிக உடன்பாட்டை ஏற்படுத்தத்தான் எல்லோரும் முயல்கிறார்கள். இந்த உடன்பாடு நீண்ட நாள் நீடிப்பதில்லை. எங்காவது மோதல் எழுகிறது. இந்த மோதல் எழுவதன் அடிப்படைக் காரணமே மக்களின் சில நம்பிக்கைகள் தான். தங்கள் வாழ்வில் உணராத ஒன்றை நம்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அதற்கு மாறாக, நீங்கள் உண்மையை நோக்கி நகர்வீர்களேயானால் எல்லாருக்கும் ஒரே உண்மைதான். அது கிறிஸ்துவராகயிருந்தாலும், இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியர்களாக இருந்தாலும் எல்லோருக்கும் உண்மை ஒன்றுதான். நம்பிக்கை என்று வருகிறபோது, ஒவ்வொருவரும் எது சரி, எது தவறு என்பது பற்றித் தனித்தனி நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். எது உண்மை, அது உண்மையில்லை என்பதைப் பற்றியும் தனித்தனியான ஒரு நம்பிக்கை இருக்கிறது. பார்க்காததையும், அனுபவித்து உணராததையும் நம்புகிறார்கள். எல்லா முரண்பாடுகளுக்கும் இதுதான் அடிப்படைக் காரணம்.

எனவே நமது அடிப்படையான நோக்கம், மதத்தை ஒரு உள்நிலை அனுபவமாகக் கொண்டு சேர்ப்பதே தவிர அதை ஒரு நம்பிக்கையோடும் தொடங்காதீர்கள். உள்ளே பார்க்க ஆரம்பியுங்கள். எது உண்மையோ அந்த உண்மையை அனுபவத்தால் கண்டுணர்ந்து இன்னும் ஆழமாகப்போய், அதை ஒரு நம்பிக்கையாக அணுகாமல் ஒரு அறிவியலாக அணுகத் தொடங்குங்கள். தொன்மையான மதங்கள் கூட எப்போதுமே நம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது துரதிர்ஷ்ட்டமாகும். ஏறக்குறைய எல்லா மதங்களுமே பக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால் பக்தி என்பது அப்பாவியாக – குழந்தைத்தனமாக இருக்கிற மனிதர்களுக்குத் தான் சரி; குழந்தையைப் போன்ற ஒரு மனநிலை தேவை என்பதிஅ எல்லா மதங்களும் சொல்லியிருக்கின்றன. இயேசு, ‘இந்தப் பாதை குழந்தைகளுக்கு உண்டானது’, என்று உங்களுக்குத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ‘கடவுளின் சாம்ராஜ்யத்தை குழந்தைகள்தான் சென்றடைவார்கள்’ என்பது அவரது வாக்கு. இதன் பொருள், குழந்தை போன்ற தன்மையுடையவர்கள் தான் பக்தி என்கிற பாதையில் நடைபோட முடியும் என்பது. தர்க்க அறிவு வளரத் தொடங்குகிற போது மனிதன் சிந்திக்கத் தொடங்குகிறான். இத்தகைய மனம் பக்திப்பாதையில் நடையிடாது. இது தன்னைத்தானே பல வழிகளில் ஏமாற்றிக் கொள்ளும்.

எனவே யோகாவில், அடிப்படையில் ஒரு மனிதன் வளர்வதற்கு – தன்னுள் இருக்கிற இறைத்தன்மையை அடைவதற்கு – அதை நீங்கள் எப்படி அழைத்தாலும் சரி, அதற்கென்று நான்கு வழிகள் உள்ளன. ஒன்று உடல் வழியாக அல்லது மனம் வழியாக அல்லது உணர்வு வழியாக அல்லது உள்நிலை சக்திகளின் வழியாக. இந்த நான்கு தான் உங்களுக்குத் தெரிந்த உண்மையான தன்மைகள். மற்றவையெல்லாம் கற்பனைகள். மற்றவை அனைத்தும் இங்கு போதிக்கப் பட்டுள்ளன. உங்களுக்குத் தெரிந்த நான்கு உண்மைகள் உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்வுகள் மற்றும் இவை மூன்றையும் இயக்குகிற உங்கள் சக்திநிலை.

எனவே மனிதர்கள் வளர்வதற்கென்று இந்த நான்கு பரிமாணங்கள் உள்ளன. இந்த நான்குதான் யோகாவின் நான்கு அடிப்படை வழிகள். உள்நிலை வளர்ச்சிக்கு உடல் பயன்படுமேயானல் அது ‘கர்மயோகா’ என்றழைக்கப்படும். மனித மனம், அறிவு ஆகியவை பயன்படுமேயானால் அது ‘ஞானயோகா’ என்றழைக்கப்படும். உணர்வு, பக்தி, அன்பு ஆகியவை பயன்படுமேயானால் அது ‘பக்தியோகா’ என்றழைக்கப்படும். உங்கள் சக்தி நிலைகளை மேம்படுத்தி அதன்மூலம் வளர்வதென்றால் அது ‘கிரியா யோகா’ என்றழைக்கப்படும். எனவே இந்த நான்கு வழிகளின் மூலமாக, ஒரு மனிதன் வளர்ந்து தன் உள்நிலையை உணரலாம். அறிவு வழியாகவோ, பக்தி வழியாகவோ, பயன் கருதாத பணிகள் மூலமாகவோ, உள்நிலை சக்திகளை மாற்றியமைப்பதன் மூலமாகவோ இது சாத்தியம். இது உடல், இதயம், சக்தி என்று சொல்வது போன்றது. முழுமையாக அறிவு சார்ந்தோ, மனம் சார்ந்தோ, உழைப்பு சார்ந்தோ, சக்தி சார்ந்தோ எந்த மனிதனும் இல்லை. இந்த நான்கு பரிமாணங்களின் கலவைதான் மனிதன்.

எனவே ஒரு மனிதன் வளர வேண்டுமேயானால் நான்கு பாதைகளுக்கும் ஒரு ஒருங்கிணைந்த மார்க்கம் தேவை. அப்போதுதான் வளர்ச்சி சாத்தியம். அப்போதுதான் எல்லையில்லா தன்மையை அடைய வாய்ப்பிருக்கிறது. இல்லையென்றால் இங்குமங்கும் மோதிக் கொள்கிற குழுக்கள் தான் இருக்கும். ஆன்மிக நிலையில் எதுவும் நிகழ வாய்ப்பில்லை. உண்மையிலேயே ஓர் உயர்ந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டாலேயொழிய, வெளியுலகத்திற்கென்று பயன்படும்படி நீங்கள் எதையும் செய்ய இயலாது. நீங்கள் எதைச் செய்தாலும் உங்கள் தன்மையைத்தான் நீங்கள் பரப்பப் போகிறீர்கள். நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ அதுதான் உண்மை. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதுதான் உங்கள் மூலம் பரப்பப்படப் போகிறது. எனவே இந்த உலகைப் பற்றிக் கவலைப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டிய முதல் பணி உங்களை மாற்றிக் கொள்வது.

இந்த அடிப்படையில்தான் யோகா தொடங்குகிறது. அமைதிப் புரட்சி என்று நாங்கள் அழைப்பது இதைத்தான். இந்த அமைதிப் புரட்சி வேறொருவரை மாற்றுவது பற்றி அல்ல. எல்லா இடங்களிலும் யாருக்கோ, யாரையோ மாற்றா வேண்டுமென்றுதான் ஆசை. மாமியாருக்கு மருமகளை மாற்ற வேண்டுமென்றும், மருமகளுக்கு மாமியாரை மாற்ற வேண்டுமென்றும் ஆசை. இது காலங்காலமாக உள்ள பிரச்சனை. அதேபோல புரட்சியாளர்கள் என்று கூறப்படுவர்களும், மதவாதிகளும் மற்றவர்களை மாற்றா வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.

‘அமைதிப்புரட்சி’ என்பது என்னை நானே மாற்றிக் கொள்ள விரும்புகிறேன் என்பது. உலகத்தை மாற்ற வேண்டுமென்பதல்ல. அது உங்களை நீங்களே மாற்றிக்கொள்கிற லட்சியம். நீங்கள் மாற விரும்பினால்தான் உலகத்தில் மாற்றம் என்பது சாத்தியம். நான் மற்றவர்களை மாற்றா வேண்டுமென்று நீங்கள் சொன்னால் அங்கே மோதல்தான் தொடங்கும். நீங்கள் மாறுவதாயிருந்தால் தான் மாறுதல் ஏற்படும். உண்மையான தீர்வு ஏற்படும்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்-7


மனித வாழ்வு எதற்காக? ஏன் இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றது? என்று கேட்கும்போதெல்லாம், நான் உங்களுக்குக் கதைகள்தான் சொல்ல வேண்டும்.

ஒருநாள் கடவுள் வேலையேதுமின்றி அமர்ந்திருந்தார். அப்போது அவர் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு கோலி இங்கே விழுந்து அது பூமியானது. மற்றொன்று அங்கே விழுந்து சூரியன் ஆனது. வேறு ஏதோ செய்தார். மனிதர்கள் உருவானார்கள். இதுபோன்ற கதைகளை நான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டே போகலாம். நான் என்ன கதைகளை உங்களுக்குச் சொன்னாலும், சிலர் அவற்றை நம்பலாம்; சிலர் அவற்றாஇ நம்பாமலும் இருக்கலாம். நீங்கள் இந்தக் கதைகளி நம்பினாலும், நம்பாவிட்டாலும் உங்கள் வாழ்க்கை எந்த வழியிலும் வளமடையப் போவதில்லை. உங்களில் பலர் இதுவரையில் ஏதோவொன்றில் எப்போதுமே நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்.

இங்கே இருக்கும் உங்களில் எவ்வளவு பேர் கடவுள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்? (நிறைய பேர் கை தூக்குகிறார்கள்) சரி. எவ்வளவு பேர் கடவுள் மீது நம்பிக்கையின்றி இருக்கிறீர்கள்? (மிகச் சிலர்தான்). சிலர் கடவுளை நம்புகிறார்கள், சிலர் கடவுள் மீது நம்பிக்கையற்று இருக்கிறார்கள். சரி. இந்தக் கூட்டத்தில், உங்களில் எத்தனைபேர் இரண்டு கைகள் உங்களுக்கு இருப்பதாக நம்புகிறீர்கள்? அவர்கள் அனைவரும் ஒரு கையை உயர்த்துங்கள். உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது உங்களுக்கு இரண்டு கைகள் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? கைகளைக் காண்பதற்கு நமக்குக் கண்களே இல்லாவிட்டால் கூட, நமக்கு இரண்டு கைகள் இருப்பதை அனுபவப்பூர்வமாய் அறிவீர்கள், இல்லையா? யாரேனும் உங்களிடம் ஒரு விவாதம் தொடங்கி, உங்களுக்கு கைகளே இல்லையென நிரூபிக்க முடியுமா? அது சாத்தியமா? இந்த விவாதம் மிகவும் சூடாகும்போது, அவருக்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தால், உங்களுக்குக் கைகள் இருக்கின்றன என்பதை அவர் அறிந்துகொள்வார். உங்களுக்கு கைகள் இருப்பதை அறிவீர்கள். ஆனால் கடவுளை மட்டும் நம்புகிறீர்கள். இது ஏன்? நமக்கு எதுவெல்லாம் தெரியாதோ, அவற்றை நாம் நம்புகிறோம். சிலர் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறார்க்ள். சிலர் கடவுள் இல்லையென்று நம்புகிறார்கள். நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் அவற்றால் எந்தப் பயனும் இல்லை. எனக்குத் தெரியாது என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டால்தான் ஒரு தேடுதல் உங்களுக்குக் தொடங்கும். தேடுதலுக்கான தேவை ஒருமுறை வந்துவிட்டால், அதற்கான விடை வெகுதூரத்தில் இல்லை. ஒருமுறை நீங்கள் ஏதாவது ஒன்றை நம்பத் துவங்கிவிட்டால், உங்களுக்குள் உள்ள தேடுதல் அழிந்து விடும். நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து விடுகிறீர்கள். ஏதாவதொன்றைப் பற்றி ஒருமுறை நீங்கள் முடிவு செய்துவிட்டால், உண்மையைப் பற்றி அறிவதற்கான அடிப்படை வேட்கையே உங்களுக்குள் அழிந்துவிடும்.

நீங்கள் கௌதம புத்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருமுறை புத்தர் அதிகாலைப் பொழுதில், சூரியோதயத்திற்கு முன்பு தனது சீடர்களுடன் சத்சங்கத்தில் அமர்ந்திருந்தார். இன்னும் இருட்டாகவே இருந்தது. அப்போது ஒரு மனிதர் அங்கே வந்தார். அவர் ஒரு ராமபக்தர். அவர் வாழ்க்கை முழுவ்டஹும் சொல்லிக் கொண்டிருந்தது, ‘ராம், ராம், ராம்!’ தான். வேறெதையும் அவர் சொன்னதில்லை. அவரது ஆடைகளில் கூட முழுவதுமாக ‘ராம், ராம்’ என்றே எழுதி இருந்தது. அவர் கோவிலுக்குச் செல்பவர் மட்டுமல்ல; நிறைய கோவில்கள் கட்டியவரும்கூட. வயதாக வயதாக ஒரு சிறு சந்தேகம் அவருக்கு எழுந்தது. ‘என் வாழ்க்கை முழுவதும் நான் ராம், ராம் என்றே சொல்லி வந்துள்ளேன். ஆனால் கடவுள் மீது நம்பிக்கை இல்லையென்று 30, 40, பேர் இங்கே கைதூக்கினார்கள். அவர்களுக்கும் கூட சூர்யோதயம் நடக்கின்றது, சுவாசமும் நடக்கின்றது. அவர்களும் சந்தோஷமாகத் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்விலும் ப சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நான் வெறுமனே அமர்ந்து ‘ராம், ராம்’ எனச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை இவர்கள் கூறுவதைப் போல கடவுள் இல்லையென்றால்… எனது வாழ்க்கை முழுவதும் வெறுமையாகி, ஒன்றுமில்லாமல் போய்விடுமே!’ கடவுள் இருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் சிறு சந்தேகம் வந்துவிட்டது; அவ்வளவுதான்.

ஆனால் எப்படி இந்தக் கேள்வியை புத்தரிடம் அனைவர் முன்னிலையிலும் கேட்பது? எனவே அவர் அதிகாலையில் இருட்டாக இருக்கும்போதே வந்து ஒரு மூலையில் நின்றவாறு, ‘கடவுள் இருக்கின்றாரா, இல்லையா?’ என்ற கேள்வியைக் கேட்டார். கௌதம புத்தர் அவரைப் பார்த்து ‘இல்லை’ என்று கூறினார். இந்தப் பதிலைக் கேட்டவுடன் சீடர்கள் மத்தியில் ஒரு நிம்மதிப் பெருமூச்சு வெளிப்பட்டது. கடவுள் இருக்கின்றாரா, இல்லையா என்ற போராட்டம் அவர்களுக்குள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருந்தது. பலமுறை அவர்கள் இந்தக் கேள்வியை கௌதமரிடம் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அவர் அமைதியாகவே இருந்துவிடுவார். இப்போதுதான் முதன்முறையாகத் தெளிவாகவும், அழுத்தமாகவும் ‘கடவுள் இல்லை’ என்று கூறியிருக்கிறார்.

கடவுள் இல்லாமல் இருப்பதென்பது எவ்வளவு மகிழ்ச்சியானது! உங்கள் வாழ்வில் நீங்கள் எது வேண்டுமாலும் செய்ய முடியும். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், என்ன செய்யவில்லை என்பதை கவனித்துக் கொண்டிருக்க ஒருவரும் இல்லை. உங்களை நரகத்தில் தள்ளித் துன்புறுத்துவதற்கு யாருமே இல்லை. இது உங்களுக்கு முழுமையான சுதந்திரம் இல்லையா? கடவுள் இல்லையென்றால் உங்களுக்கு முழுமையான சுதந்திரம். சீடர்கள் மத்தியில் நிறைவான சந்தோஷம். அந்த நாள் சந்தோஷமான நாளாக இருந்தது.

மாலை நேரத்தில் புத்தர் அவருடைய சீடர்கள் மத்தியில் அமர்ந்திருந்த போது, மற்றொரு மனிதர் அங்கே வந்தார். அவர் ஒரு சார்வாகர். அந்த நாட்களில் சார்வாகர்கள் என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் பொருளீட்டுவதில் மட்டுமே நாட்டம் உள்ளவர்கள். அவர்கள் பார்ப்பதை மட்டுமே நம்புபவர்கள். வேறு எதையும் நம்புவதில்லை. அவர்கள் உங்கள் நகருக்கு வந்து உங்களிடம் சவால் விடுவார்கள். ‘யாராவது கடவுள் இருக்கின்றார் என்று நிருபித்தால் தான் நூறு பொற்காசுகள் தருவேன். இல்லையென்றால், நீங்கள் அனைவரும் சேர்ந்து நூறு பொற்காசுகளை எனக்குத் தர வேண்டும்.” அவருடைய வாழ்க்கை முழுவதும் இந்த வழியில் மட்டும் சம்பாதித்தார். ஊர் ஊராகச் சென்று ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என நிருபித்து வந்தார். இது அவருடைய வேலை. கடவுள் இல்லை என்பதை ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிரூபித்து அவர் தனது துறையில் பெரிய மனிதராகத் திகழ்ந்தார்.

தற்போது வயது ஆக ஆக சிறு சந்தேகம் வந்துவிட்டது. ‘எனது வாழ்க்கை முழுவதும் கடவுள் இல்லையென்றே நான் மக்களிடம் கூறி வந்திருக்கிறேன். ஒருவேளை கடவுள் இருந்தால்? நான் அங்கே போகும்போது அவர் என்னை விடுவாரா? நரகம் என்று ஏதோ இருப்பதாக மக்கள் சொல்கிறார்களே.’ சிறு சந்தேகம்… கடவுள் இல்லையென்று அவருக்குத் தெரியும். இதனை அவரது வாக்கை முழுவதும் நிருபித்தும் வந்திருக்கிறார். ஆனால் ஒரு சிறு சந்தேகம்… ஒருவேளை கடவுள் இருந்தால்? எதற்கு வம்பு, நகரிலே ஞானமடைந்த மனிதர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்போம். ஆகவே மாலை வேளையில் இருட்டிய பிறகு, அவர் புத்தரிடம் சென்று, ‘கடவுள் இருக்கிறாரா?’ என்று கேட்டார்.

கௌதமர் அவரைப் பார்த்து, ‘ஆமாம்’ என்று கூறினார். மீண்டும் ஒரு மிகப் பெரிய போராட்டம் சீடர்களிடையே தொடங்கியது. கடவுள் இல்லையென்று அவர் கூறியதால் காலை முதல் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் மாலையிலோ கடவுள் இருக்கிறார் என்று கூறுகிறார். ஏன் இப்படி?

வளர்ச்சியடைவதற்கான தேவை உங்களுக்குள் ஆதாரமாக இருக்கும்போது, இது உங்களுடைய நோக்கமாக இருக்கும் போது, எது உங்களுடைய அனுபவத்தில் இருக்கின்றது. எது இல்லை என்பதைப் பற்றிய தெளிவு முதலில் உங்களுக்கு இருக்க வேண்டும். உங்கள் அனுபவத்தில், இருப்பது எது?, இல்லாதது எது? என்பதைப் பற்றித் தெளிவாக வ்ரையறுத்துக் கொள்ளூங்கள். உங்காள் அனுபவத்தில் எது இல்லையோ அதனை இல்லையென நீங்கள் கூறத் தேவையில்லை. வெறுமனே ‘எனக்குத் தெரியாது’ என்று கூறுங்கள். நீங்கள் ‘தெரியாது’ என்று ஏற்றுக்கொண்டால், புறகு வளர்ச்சி ஏற்படும். தற்போது உங்களுக்கு எதுவெல்லாம் தெரியாதோ, அவற்றை நம்பத் தொடங்குகிறீர்கள். உங்களுக்கு அனைத்துமே தெரிந்ததாக எண்ணுகிறீர்கள்.

இந்தியாவில் உங்களுக்குக் கடவுளைத் தெரியும். அவ்ர் எங்கிருக்கிறார் என்று தெரியும். அவ்ருடைய பெயரும் உங்களுக்குத் தெரியும்.. அவருடைய மனைவி யாரென்று உங்களுக்குத் தெரியும். அவருக்கு எத்தனை குழந்தைகள் என்றும் உங்களுக்குத் தெரியும். அவருடைய பிறந்தநாளும் தெரியும். அவருடைய பிறந்த நாளிற்கு அவர் விரும்பும் இனிப்பு என்ன என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. தற்போதிய முழுப்பிரச்சனையும் அதுதான். உங்களுக்கு சொர்க்கத்தின் முகவரி கூடத் தெரியும். ஆனால் இந்தக் கணத்தில் உங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு இல்லை.

இப்போது உங்களுக்குள் வளர்ச்சி நடைபெற வேண்டுமெனில், இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும். இப்போது உங்கள் அனுபவத்தில் என்ன இருக்கின்றது? உங்கள் உடலை ஓர் அளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த மனதை ஓரளவிற்கு உணர்ந்திருக்கிறீர்கள். இந்த உடலையும், மனத்தையும் இயக்குகின்ற சக்தியினை ஒரு குறிப்பிட்ட ஆளவிற்கு ஒரு சிஅல் கணங்கள் நீங்கள் உணர்ந்திருக்க முடியும். இதைத் தாண்டி நீங்கள் எதிஅயும் உணரவில்லை. மற்றாவை எல்லாமே கற்பனைதான். இந்தச் சமூகம் எந்த வழியில் கற்பித்ததோ, அதே வழியில்தான் உங்கள் கற்பனையும் உள்ளது. உங்கள் அனுபவத்தில் எது இருக்கின்றது? எது இல்லை? என்று பாருங்கள். உங்களது அனுபவத்தில் இல்லாததை எல்லாம் ‘எனக்குத் தெரியாது’ என்று நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். இது மிக மிக அவசியமானது. இல்லாவிட்டால் உங்கள் வாழ்க்கை முழுவதும் பாசாங்காகிவிடும்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்-6



     உங்களைப்போல் தடுமாறிப் போகாமல் குழந்தைகளை வளர்ப்பது எப்படி? உங்கள் வாழ்க்கை- குழப்பத்தில், தடுமாற்றத்தில் இருக்கிறது என்ற உண்மை தெரிந்திருக்கிறதென்றால் நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை, உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யக்கூடாது. உங்கள் குழப்ப மனநிலையைக் கொண்டு அவர்கள் மனதில் எந்தப் பாதிப்பும் உருவாக்காதீர்கள். இதுதான் நீங்கள் மேற்கொள்ள வேண்டிய முதல்படி.

     மற்றவர்கள் அழுகிய மனங்களோடு உங்கள் குழந்தைக்குத் தொல்லை தரக்கூடும். அவர்களிடமிருந்து உங்கள் குழந்தையைத் தனிமைப்படுத்திவிட முடியாது. ஏனெனில், உலகமெங்கும் அவர்கள் இருக்கிறார்கள். இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? குழந்தைக்கான கல்வி எப்படி இருக்க வேண்டும்? குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும்? குழந்தைக்கு எப்படி வழிகாட்ட வேண்டும்? அறிவுக்கூர்மையோடும், விழிப்புணர்வோடும் இருக்க உங்கள் குழந்தையை ஊக்கப்படுத்துங்கள். வாழ்க்கையை நிறைவேற்றுவதற்குத் தேவையான அடிப்படை அறிவு எல்லோருக்கும் தரப்பட்டிருக்கிறது. ஒரு எறும்பு பிறக்கிறது. எறும்பை நீங்கள் கூர்ந்து கவனித்துப் பாருங்கள். இந்த எறும்புக்கு வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்கான அனைத்து அறிவும் இருக்கிறது. நீங்கள் செய்வதை அதனால் செய்ய முடியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு எறும்ப்ய் என்ன செய்யவேண்டுமோ, அதற்குத் தேவையான அறிவு அதற்கு இருக்கிறது. இது ஒவ்வொரு உயிரினத்துக்கும் பொருந்தும். உங்களுக்கும் பொருந்தும். ஆனால், என்ன சிக்கல் என்றால், உங்களைப் போன்ற அறிவோடு உங்கள் குழந்தை இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்தக் குழந்தை தன் இயல்புக்கேற்றாற்போல் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் புரிந்துகொண்ட விதத்திலேயே உங்கள் குழந்தையையும் அறிவைப் புரிந்து கொள்ளவேண்டும் என எண்ணுகிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை உங்கள் குழந்தை ஒரு மருத்துவராக வேண்டும். ஆனால் அந்தக் குழந்தை அற்புதமான தச்சுப் பணியாளராக வரலாம். உங்கள் குழந்தை மருத்துவராக வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த உலகிற்கு மருத்துவர் தேவை என்பதாலோ, மருத்துவ சிகிச்சையின்றி தவிப்பவர்மீது அக்கறை கொண்டோ இம்முடிவை நீங்கள் எடுக்கவில்லை. உங்களுக்கு ஒரு முட்டாள்தனமான கருத்து, சமூகத்தில் ஒரு மருத்துவரோ- இல்லை ஒரு பொறியாளரோ அல்லது வேறு ஏதோ ஒரு அபத்தமான பொறுப்போதான் உங்களுக்கு பெருமை என்று கருதுகிறீர்கள்.

     இதையே வேறுவிதமாகச் சொல்வதென்றால் உங்கள் வாழ்க்கை உங்களுக்கு நிறைவு தருவதாக இல்லை. எனவே உங்கள் வாழ்க்கையை உங்கள் குழந்தை மூலம் வாழ விரும்புகிறீர்கள். ‘என் குழந்தை ஒரு மருத்துவர்’ என்பது குழந்தையைக் கெடுப்பதற்கான வழி. எல்லாக் குழந்தைக்கும் போதிய அறிவு இருக்கிறது. தன்னுடைய அறிவுநிலைக்கு ஏற்ப அந்தக் குழந்தை வளர்வதற்குச் சூழ்நிலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, உங்கள் சிந்தனைகளை அக்குழந்தையின்மீது திணிப்பது ஆகாது. அந்தக் குழந்தைமேல் ஒரு பாதிப்பை ஏற்படுத்துவதில் ஆசிரியருக்கென்று ஒரு பங்கு இருக்கிறது. நண்பர்களுக்கென்று ஒரு பங்கு இருக்கிறது. சமூகத்தின் பிற பகுதிகளுக்கும் சில பங்குகள் இருக்கின்றன. இதை நீங்கள் முழுக்கத் தவிர்த்துவிட முடியாது. ஆனால் பெற்றோர் என்ற முறையில் ஒரு முக்கியப் பங்காற்றி குழந்தையின் இயல்பான அறிவுநிலை வளர நீங்கள் துணை செய்யலாம். முதலில் ஒரு குழந்தை பிறந்தாலே அதற்குப் போதனை செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கிறீர்கள். பிறகு அந்தக் குழந்தியை நீங்கள் கெடுத்து விடுவீர்கள். ஒரு குழந்தை பிறக்கிறதென்றால் நீங்கள் கற்றுக் கொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக அர்த்தம்; உங்கள் வாழ்க்கையில் எத்தனையோ இழந்திருக்கிறீர்கள். எவ்வளவோ கோணல்கள் ஏற்பட்டுவிட்டன.

     குழந்தை வாழ்க்கையை முற்றிலும் புதிதாகப் பார்க்கிறது. நீங்கள் உங்கள் குழந்தையோடு புதிதாக உங்கள் வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு உங்கள் அழுகிய சிந்தனையும் தலைகாட்டும். அதையும் தாண்டி அக்குழந்தையின் அறிவு தானாக வளரும். எனவே, நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தரக்கூடியது அன்பும், ஆதரவும்தான். அது போதும். அன்புமயமான ஒரு சூழல் ஏற்படுத்தினால் அக்குழந்தையின் அறிவு இயல்பாகவே மலரும். இதைத்தான் உங்களால் செய்ய முடியும். நீங்கள் வாழ்க்கையில் என்ன செய்தீர்களோ அதையே உங்கள் குழந்தையும் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நினைத்தும் பார்க்காத ஒன்றை உங்கள் குழந்தை செய்யலாம் இல்லையா? நீங்கள் ஒன்றைப் பற்றி யோசிக்கக்கூட அஞ்சியதை, உங்களுக்கு வரவே வராத எண்ணத்தை குழந்தை இயல்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த உலகத்தில் வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக இந்தியாவில் குழந்தைகள் எண்ணிக்கை ஏராளம்.

     இந்த நாட்டின் மக்கள் தொகையைப் பார்த்தால் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதே ஒரு குற்றம். இந்த மக்கள்தொகை பெருக்கத்தை நீங்கள் அன்பு காரணமாகச் செய்யவில்லை. செய்வதற்கு வேறு ஏதும் பணி இல்லை. ஆகவே செய்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்வில் வேறு ஏதேனும் மதிப்புடியதாகச் செய்வதற்கில்லை. எனவே நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்டே போகிறீர்கள். இது அன்பின் காரணமாக அல்ல. ஒன்று பாதுகாப்பின்மையினால் அல்லது வேறு பணி இல்லாததால். பெரும்பாலும் பாதுகாப்பு உணர்வு இல்லாததால் தான், இல்லையா?

     இன்னும் சிலபேர் செய்கிற தவறான விஷயம் என்னவென்றால் குழந்தையை அன்பாக வளர்ப்பதென்றால் அது கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது என்று நினைக்கிறீர்கள். இது முட்டாள்தனம். முதலில் உங்கள் குழந்தையையே நீங்கள் புத்திசாலித்தனமாகப் பார்ப்பதில்லை. உங்கள் குழந்தையைப் போதிய அறிவோடு நீங்கள் பார்ப்பீர்களேயானால், அந்தக் குழந்தை கேட்டதையெல்லாம் வாங்கித் தருவது முட்டாள்தனம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அதற்கு அன்பு என்று பெயர் சுமத்துகிறீர்கள். குழந்தையை எப்படி நீங்கள் வளர்க்க வேண்டுமென்றால் அதைக் காட்டில் விட்டாலும், சமூகத்தில் விட்டாலும் ஆனந்தமாக இருக்க வேண்டும். அப்படித்தான் வளர்க்க வேண்டும். குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டுமென்றால் நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்று உங்களுக்குத் தெரிய வேண்டும். உங்கள் வீட்டில் ஒவ்வொரு நாளும் பதட்டமும், கோபமும், அச்சமும், பொறாமையும் அரங்கேறிக் கொண்டே இருக்குமானால் இவற்றைத்தான் அது பழகும். இதற்குத்தான் வீட்டில் செய்முறைப் பயிற்சி குழந்தைக்குக் கிடைக்கிறது. எனவே நல்ல முறையில் குழந்தையை வளர்க்க வேண்டுமானால், நீங்கள் முதலில் உங்கள் தன்மையை மாற்றிக் கொள்ள வேண்டும். அன்புமயமான- ஆனந்தமான- அமைதியான ஒரு வாழ்க்கை வாழ்பவராக உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களையே நீங்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வைத்துக்கொள்ள முடியவில்லையென்றால், மிகவும் சக்திவாய்ந்த உங்கள் குழ்ந்தையை என்ன செய்ய முடியும்? உங்கள் பதட்டங்கள், உங்கள் கோபங்கள் போன்ற அபத்தமான குணங்கள் உங்கள் குழந்தைக்கும் வரும். குழந்தைமீது உள்ளபடியே அக்கறை இருக்குமானால். நீங்கள் முதலில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எனவே ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பே இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கின்ற தகுதி உங்களுக்கு இருக்கிறதா, இல்லையா என்று யோசியுங்கள். யோசிக்கும்போது உங்கள் வாழ்க்கைக்குக் குழந்தை அவசியமா, இல்லையா என்றும் யோசியுங்கள்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்-5



நான் சொல்வது உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். தமிழ்நாட்டில் ஒருவிதமான வாஸ்து இருக்கிறது. கர்நாடகத்திற்குச் சென்றால் அங்கு வேறுவிதமான வாஸ்து வழக்கில் இருக்கிறது. கர்நாடகாவிலும் கூட மலைப் பகுதிகளில் இன்னொரு விதமான வாஸ்து பின்பற்றப்படுகிறது. மலைப்பகுதிகளில் வேறுவிதமாகவும், சமப்பகுதிகளில் வேறுவிதமாகவும் வாஸ்து இருக்கிறது. வாள்து என்றால் என்ன? பழங்காலங்களில் கிராமங்களில் கட்டிடக்கலை நிபுணர்கள் யாரும் இல்லை. உதாரணத்திற்கு, ஒரு மனிதர் தன் வீட்டை தானே கட்டிக்கொள்கிறார். அவர் ஐந்து அடி உயரத்திலும், ஐந்து அடி அகலத்திலும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்கிறார். கதவு ஒரு மூலையில் இருக்கிறது. ஜன்னல் வைக்க மறந்துவிட்டார். இப்படிப்பட்ட ஒரு வீட்டில் இருந்தால் உங்கள் மனதிற்கும் உடலுக்கும் என்ன ஆகும்? சீரழிந்து போய்விடும் இல்லையா? இந்தக் கட்டுமான அமைப்பில் இந்தச் சுவர்களுக்கு இடையில் இருந்து கொண்டிருந்தால், நிச்சயமாக உடலும் மனமும் சீர்கெடும். எனவே, அடிப்படை வழிகாட்டுதல்களுக்காக சாஸ்திரத்தை வடிவமைத்தார்கள்.

சாஸ்திரம் என்ற சொல்லிற்கு ‘வழிகாட்டுதல்’ என்று பொருள். ஒரு வீடு கட்டுவதாக இருந்தால் அந்தப் பகுதியின் சீதோஷணத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட விதத்தில் கட்டிடம் அமைய வேண்டும். மேற்கில் மறைகிற சூரியக்கதிர்கள் அங்கே வலிமையாக விழுமேயானால், மேற்குப்பகுதியில் இருக்கிற சுவர் தடித்த சுவராக இருக்க வேண்டும். அதன் இன்னொரு பக்கம் கொஞ்சம் மெல்லிய சுவராகக்கூட இருக்கலாம். இதை ஓரளவிற்கு மக்கள் பின்பற்றினார்கள். நல்ல பலன் கிடைத்தது. எனவே, போதிய காற்றோட்டத்தோடு வீடு கட்டுவதற்கான கட்டிடக்கலை ஆலோசனைகள்தான் வாஸ்து என்பது. கிராமங்களில் கட்டிடக்கலை நிபுணர்கள் இல்லாததால் சில அடிப்படை விதிகள் வகுக்கப்பட்டன. அவற்றின்படி வீடுகள் கட்டினால் அங்கு வாழ்வதற்கு நன்றாக இருக்கும் என்பதற்காக.

இந்தியாவிலேயே பலவிதமான வாஸ்துகள் உள்ளன. அந்தந்தப் பகுதிகளுக்கேற்ற வாஸ்து முறைகள். கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் அதற்கு மக்கள் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கினார்கள். அதற்கு முன்பு இந்த நிலை இல்லை. இப்போது அது ஒரு பெரிய வணிகம் ஆகிவிட்டது. வாஸ்து உங்களுடைய வாழ்க்கைக்குள் வ்ருவதற்கு காரணம், எப்போதுமே நீங்கள் அம்சத்தில் வாழ்வதுதான். ஒரு சமையல் அறை இருக்க வேண்டிய இடத்தில் கழிவறையையும்,  கழிவறை இருக்க வேண்டிய இடத்தில் சமையல் அறையையும் கட்டியிருக்கிறீர்கள். அந்த அளவிற்கு இது போயிருக்கிறது. இப்போது என்ன கேள்விப்படுகிறேன் என்றால், நிறைய பேர் அவர்களின் கழிவறைகளில் இருக்கிற தண்ணீர்த் தொட்டியின் திசையைக்கூட மாற்றி வைக்கிறார்கள். ஏனென்றால், வாஸ்து சொல்கிறது – குறிப்பிட்ட திசையில் அமர்ந்து கொண்டு மலங்கழித்தால் நல்லது என்று! இதைவிடவும் கொடுமை இருக்க முடியுமா என்ன?

நான் முதன்முதலாக கோவைக்கு வந்தபோது, ஒரு வீட்டிற்கு என்னைச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தார்கள். அது ஒரு பெரிய வீடு. வீட்டிற்கிள்ளேயே ஒரு சிறிய தோட்டம் இருந்தது. மிக அழகான வீடு. ஆனால் அந்தத் தோட்டத்தின் மையப்பகுதியில் ஒரு பெரிய கொடிக்கம்பம் இருந்தது. எந்த ஒரு காரணத்திற்காகவும் இல்லாமல் அது வெறுமனே அங்கு நின்று கொண்டிருந்தது. அங்கிருந்த பெண்மணியைப் பார்த்து “இந்தக் கொடிக்கம்பம் எதற்காக?” என்று கேட்டேன். அவர் என்னிடம் சொல்லத் தயங்கினார். என்னிடம் உண்மையைச் சொன்னால் என்ன ஆகும் என்று அவருக்குத் தெரியும். எனவே, “நான் ஈஷா யோகா வகுப்பிற்கு முன்பே வந்திருந்தால் இதைச் செய்திருக்க மாட்டேன்” என்று சொன்னார். “ஏன்? என்னாயிற்று?” என்று கேட்டேன். ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்கு முன்பு எந்த வீட்டைக் கட்டியதாகவும், அங்கு பல ஆண்டுகள் அவர்கள் நன்கு வாழ்ந்து வந்ததாகவும் சொன்னார். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு ஒரு வாஸ்து விஞ்ஞானி வந்தார். இயற்கையில் இல்லவேயில்லாத ஒரு விஷயத்தைக் கண்டுபிடிப்பவர்கள் தான் பெரிய விஞ்ஞானிகள்.

இந்த வாஸ்து விஞ்ஞானி வந்து பார்த்துவிட்டு, ‘இந்த வீட்டில் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் இந்த வீட்டின் தென்மேற்கு மூலை, அந்த வீட்டை விடக் கொஞ்சம் உயரமாக இருக்கவேண்டும். ஆனால் உங்கள் வீட்டின் வடமேற்கு மூலைதான் கொஞ்சம் உயரமாக இருக்கிறது. இது இப்படியிருந்தால் உங்கள் மகன் இறந்துவிடுவான்’ என்று சொல்லியிருக்கிறார். இந்தப் பெண்மணிக்கு இரண்டு மகன்கள். இதைச் சொல்லிவிட்டு அந்த விஞ்ஞானி போய்விட்டார். இப்பொழுது இந்தப் பெண்மணி பதறிப் போய்விட்டார். அவரது கணவர் ஒரு மருத்துவர். அவர் இதை ஏற்கவில்லை. அவருக்கு வீட்டை இடித்துக் கட்டுவதில் விருப்பமில்லை.

அந்த விஞ்ஞானி செய்துவிட்டுப் போன இந்த மனக்குழப்பம் இந்த வீட்டில் ஒரு வாரம் நீடித்திருக்கும் வரை பொறுத்திருந்தார். இந்த வாரத்திற்குள் பல்வேறு உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு ஏறக்குறைய பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு இந்தப் பெண்மணி போய்விட்டார். தன் மகன்கள் தெருவோரத் திருப்பங்களில் இறந்துவிழுவது போல் கனவு வரத்தொடங்கியது. அவர் மனதில் ஏகப்பட்ட கற்பனைகள் தொடங்கின. மிகவும் பயந்து போய்விட்டார். தன் மகன்கள் எப்போதும் இறக்க நேரிடும் என்ற அச்சம் நீடித்தது. எனவே ஒரு வாரத்திற்குப் பிறகு அந்த விஞ்ஞானியை மறுபடியும் அழைத்தார். அந்த வாஸ்து விஞ்ஞானிக்கும் இது தெரியும் – அவர் சொல்லிவிட்டுப் போய் எத்தனை நாட்களுக்குள் இந்த எதிர்விளைவு ஏற்படும் என்று. ஒரு வாரத்திற்குள் அந்த வாஸ்து விஞ்ஞானியே தொலைபேசியில் அழைத்திருக்கிறார். அந்தத் தீமையை எதிர்கொள்வதற்கு ஏதாவது செய்யுமாறு அவரை இவர் கேட்டுக்கொண்டார்.

அந்த மனிதர் இதற்கு ஒரு பரிகாரம் இருக்கிறது என்று சொல்லி 20,000 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு, அவர்கள் மகன் சாகாமல் இருப்பதற்காக ஒரு 25 அடி உயர கொடிக்கம்பத்தை வீட்டிற்குக் கொண்டுவந்தார். அந்த வீட்டில் இருப்போர் உதவியோடு மிகவும் சிரமப்பட்டு அந்தக்கொடிக்கம்பம் வீட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதற்காக மிகவும் சிரமம் எடுத்துக்கொண்டதுபோல நடித்தால் தானே இந்த நாடகம் உச்சகட்டத்தை அடையும். அந்தக் கொடிக்கம்பத்தைக் கொண்டு வந்து வைத்து விட்டார்கள்.

இப்போது இந்தக் கொடிக்கம்பம் வந்ததால் அதன் மேற்கு மூலை உயரமாகி அவர்கள் மகனின் உயிரை இவர் காப்பாற்றிவிட்டார்.

நிச்சயமாக வீடு கட்டுவதற்கு என்று ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. அதில் உடல்நலம், உள்ளநலம் என்று நல்வாழ்க்கைக்கு உதவி செய்வதற்கென்று அம்சங்கள் உள்ளன. இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் அச்சத்தின் காரணமாக அதற்கு அளவி கடந்த முக்கியத்துவத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டீர்கள். வாஸ்து ஒரு விஞ்ஞானம் தான்.. நான் மறுக்கவில்லை. இப்பொழுது அது முழுமையாகக் கைவிடப்பட்டிருக்கிறது. அதற்கு மாற்றாக சீனாவில் இன்னொன்று வந்திருக்கின்றது. இனி உங்கள் கழிப்பறையை நீங்கள் சமையலறையாக மாற்ற வேண்டியதில்லை. கழிப்பறையின் முன்னால் ஒரு கண்ணாடி வைத்துவிட்டால் போதும். கழிப்பறையிலேயே உங்கள் சமையலறை தெரியும். இதைச் செய்தால் எல்லாம் சரியாகிவிடும். இவர்கள் என்னும் அறிவாளிகளாக இருக்கிறார்கள். எதையும் இடிக்க வேண்டாம். வெறும் கண்ணாடிகளும், கற்களுமே எல்லாவற்றையும் சரி செய்து தருகிறது. எது செய்ய வேண்டுமோ அதை நீங்கள் செய்வதில்லை. தேவையில்லாத விஷயங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள். உங்கள் எல்லா சக்தியையும் இதுபோன்ற செயல்களில் நீங்கள் வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்-4


     இந்தக் கூட்டத்தில் உண்மையான அறிவாளி ஒருவர் இருந்தால் அடுத்த வினாடி அவர் என்ன செய்வார் என்பதை யாராவது கணிக்க முடியுமா? முடியாது. ஏனெனில் இதுவரை யாருமே செய்யாத ஒன்றை அவர் செய்துவிடக்கூடும். ஒரு அறிவாளி இருந்தால் உலகில் இதற்குமுன் நடந்தேயிராத நிகழ்ச்சி ஒன்றை அவரால் செய்ய அதிக சாத்தியம் இருக்கும் இல்லையா? ஆனால், இங்கே ஒரு ஒரு முட்டாள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் வாழ்க்கை முழுவதும் எதிர்காலத்தில் எப்படி வாழ்வார் என்று எளிதாகச் சொல்லிவிட முடியும். நீங்கள் ஜோதிடம் பார்க்கப் போனால் உங்கள் எதிர்காலம் எப்படியிருக்குமென்று ஒரு காகிதத்தில் எழுதியே கொடுத்து விடுகிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? உங்களுக்கு அறிவு இல்லை என்று அர்த்தமில்லை. அதைப் பயன்படுத்தப் போவதில்லை என்று நீங்கள் முடிவெடுத்திருப்பதாகத்தான் தெரிகிறது. உங்களுடைய அறிவைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவெடுத்ததுபோல் உள்ளது.

உதாரணத்திற்கு வடிவம் என்று ஒன்றிருந்தால் அதற்கொன்று சில அதிர்வுகள் இருக்கும். அந்த அதிர்வினால் ஒரு தன்மை இருக்கும். இப்போது இந்தக் கைகுட்டையை நான் ஒரு விதமாகப் பிரித்தால் அதற்கென்று ஒரு அதிர்வும், வேறுவிதமாகப் பிடித்தால் அதற்கென்று ஒரு அதிர்வும் இருக்கும். உங்களுக்குச் சூட்சுமமாக உணரத் தெரிந்திருந்தால் இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும். நீங்கள் வைத்டிருக்கும் விதமே அதிர்வுகளை மாற்ற முடியும். ஒவ்வொரு வடிவத்திற்கென்றும் தனி அதிர்வுகள் உண்டு. அதுபோல் கிரகங்களுக்கும் சில அதிர்வுகள் உண்டு. அதிர்வுகள் காரணமாக அவை வென்வேறு நிலைகளில் இருக்கும்போது, அதில் ஏற்படும் நிகழ்வுகளினால் உங்களுடைய மனநிலையில் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும். உதாரணத்திற்கு அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சற்றே மனநிலை சரியில்லாதவர்கள் சற்று கூடுதலாக நிலையில்லாமல் இருப்பார்கள். இது உங்களுக்குத் தெரியுமல்லவா? சற்றே மனநிலை சரியில்ல்லமல் இருப்பவர், சற்றே கூடுதலாகக் கட்டுப்பாடு மீறி இருப்பார். நீங்களும் அந்த நாட்களில் அதுபோல் ஆகி விடுகிறீர்காளா? உங்களையும் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வீட்டுக்குள் பூட்டிவைக்க வேண்டுமா என்ன? தேவையில்லை அல்லவா! ஏனென்றால் அவர்களோடு ஒப்பிடும்போது உங்கள் மனம் கொஞ்சம் சமநிலையில் இருக்கிறது. அதனால் நிலா எங்கேயிருந்தாலும் அது உங்களுக்குள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தவில்லை. அதுபோல இன்னும் கொஞ்சம் சம நிலையை நீங்கள் அடைவீர்கள் என்றால் அந்தக் கிரகம் எங்கே போனாலும் நீங்கள் உங்கள் தன்மைக்கேற்ப இருப்பீர்கள். உங்களைவிட குறைந்த சக்தி எதுவும் உங்களை ஆளாது.

இந்தக் கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாமே ஜடப்பொருட்கள் தானே? கல், மண் போல அவையும் ஜடப்பொருட்கள். ஜடப்பொருட்கள் வலிமையானவையா? மனிதத் தன்மை வலிமையானதா? மனிதத் தன்மை ஜடப்பொருட்கள் மீது ஆளுமை செலுத்த வேண்டுமா? அல்லது மனிதத் தன்மைமீது ஜடப்பொருட்கள் ஆளுமை செலுத்த வேண்டுமா? எது சரி? எது எதை ஆளவேண்டும்? மனிதத்தன்மைதான் ஜடப்பொருட்கள் மீது ஆளுமை செலுத்த வேண்டும். அந்நிலை வந்துவிட்டால் நட்சத்திரங்கள் எங்கே போனாலு, கிரகங்கள் என்ன ஆனாலும் நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்? உங்கள் உள் தன்மை உறுதியாகவும் சமநிலையிலும் இருந்தால் நீங்கள் விரும்பும் விதத்தில் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.

யோக அறிவியல் என்பது உங்கள் முழு வாழ்க்கையையும் உங்கள் உடலின் தன்மை, உங்கள் மனதின் தன்மை, உங்கள் வாழ்வின் தன்மை அனைத்தையும் முழுக்க உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நீங்கள் வுரும்பும் விதத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கான வாய்ப்புத்தான். எந்த அளவிற்கு நீங்கள் ஆளுமை செலுத்த இயலுமென்றால் எந்தக் கருப்பையில் பிறக்கப் போகிறீர்கள் என்பதைக்கூட நீங்களே முடிவு செய்யலாம். அந்த அளவிற்கு முடிவெடுக்கும் சக்தி உங்களிடம் உண்டு. அதற்கென்ற ஒரு அறிவியல் அடிப்படையும் உண்டு. எப்போது பிறப்பது, எப்போது இறப்பது என்கிற முடிவைக்கூட நீங்களே எடுக்கலாம். அதற்கும் ஒரு அறிவியல் உண்டு. இந்த உள்நிலை அறிவியலைத்தான் யோகா என்கிறோம்.

இப்போது எண் கணிதத்திற்கு வருவோம். எண் கணிதப்படி பெயரை மற்றிக்கொண்டால் பயன் உண்டா என்று கேட்கிறீர்கள். நீங்கள் இக்கேள்வியைக் கேட்பதால், எனக்கொரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் ஈஷா யோகா வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கேற்ற ஒருவர் தன் அடையாள அட்டையில் ‘பச்சா’ என்று ஆங்கிலத்தில் வரும் விதமாக எழுதியிருந்தார். நானும் அவரை பச்சா, பச்சா என்று அழைத்து கொண்டிருந்தேன். 12 நாள் வடுப்பிற்குப் பிறகு என்னிடம் வந்து, ‘நீங்கள் வகுப்பில் என்னை பச்சா, பச்சா என்றழைத்தீர்கள். என் பெயர் பச்சா இல்லை;பாட்ஷா’ என்று கூறினார். பச்சா எங்கே, பாட்ஷா எங்கே? இந்தியில் பாட்ஷா என்றால் ‘சக்கரவர்த்தி’ என்று பொருள். பச்சா என்றால் சிறுவன் என்று பொருள். எப்படி ஒப்பிடுவது? பச்சா என்று வரும்படி ஏன் எழுதியிருந்தீர்காள்?” என்று கேட்டேன். ‘யாரோ ஒரு எண் கணித ஜோசியர் கூறினார். அதனால் நான் பாட்ஷாவை பச்சாவாக மாற்றி விட்டேன்’ என்று கூறினார். வாழ்க்கையில் சக்கரவர்த்தியாகும் வாய்ப்பு இருக்கையில் ஒரு சிறுவனாக ஆவது ஏன்?

முதலில் இந்த எண்களை உருவக்கியவர் யார்? அவை இயற்கையிலேயே இருந்தனவா? நம்முடைய வசதிக்காக நம் விரல்களைக்கொண்டு எண்ணூவதற்கு வாய்ப்பாகத்தான் எண்களை உருவாக்கினோம். பத்து விரல்கள் என்கிற அடிப்படையில்தான் பத்து வரை எண்கள் வரையறுக்கப்பட்டன. நமக்குப் பதினான்கு விரல்கள் இருந்திருந்தால் 8,9,10, தாம், தூம், என்று எண்ணிக்கொண்டிருப்போம். 10 விரல்கள் இருப்பதால் நமது வசதிக்காக எண்கள் நம்மீதே ஆளுமை செலுத்தலாமா? இதற்கு ஒரு உதாரணம் சொல்ல விரும்புகிறேன். ஆறேழு வருடங்களுக்கு முன்பு நான் ஒரு மாருதி கார் ஓட்டிக்கொண்டிருந்தேன். பிறகு அதை விற்க முடிவு செய்தேன். எனக்குத் தெரிந்த ஒருவர் அதனை வாங்க முன் வந்தார். நான் அவரிடம், ‘அந்தக் கார் மிக அதிகமான அளவு பயன்படுத்தப் பட்டுவிட்டதால் அதை நன்றாகப் பார்த்துவிட்டு விருப்பம் இருந்தால் வாங்கிக் கொள்ளலாம்’ என்று சொன்னேன். அதற்கு அவர், ‘ இல்லையில்லை! எதையும் பார்க்க வேண்டாம். இதை நீங்கள் விற்றால் நான் தான் வாங்கவேண்டுமென்று, நீங்கள் அதை வாங்கும்போதே முடிவு செய்து விட்டேன்’ என்றார். ஏன் என்று கேட்டதற்கு. ‘உங்கள் காருக்கு அருமையான ஒரு எண் அமைந்திருக்கிறது’ என்றார். இத்தனை நாள் இந்தக் காரை ஓட்டியிருக்கிறேன். அதன் அருமையான எண் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. “கார் எண்ணெல்லாம் இருக்கட்டும். முதலில் ஓட்டிப் பாருங்கள். வாங்கும் முன்பே பிடித்திருக்கிறதா என்று பாருங்கள்” என்று வற்புறுத்தினேன். அவர், ‘அதெல்லாம் வேண்டாம். இந்த எண் அமைந்ததே போதும்’ என்று சொல்லிவிட்டார். எப்படி இப்படி ஒரு மனிதர் இருக்க முடியும் என்று ஆச்சரியமாக இருந்தது.

அவர் என்னிடம் அந்தக் காரின் எண் 333 என்றும்; அவரது பிறந்தநாள் 3-வது மாதம், 3-ம் தேதி என்பதால், அன்று காலை பதினொன்றேமுக்கால் மணி அளவில் காரை எடுத்துச் செல்வதாக கூறினார். நான் அப்போதைய நிலவரத்தில் அந்தக் கார் என்ன விலைக்குப் போகும் என்று அவரையே விசாரித்து அதற்கேற்ப ஒரு தொகையைக் கொடுக்குமாறு சொல்லிவிட்டேன். அவர் இருக்கும் நிலையைப் பார்த்து அவரை அப்படியே விட்டுவிடக்கூடாது என்று எனக்குத் தோன்றியது. எனவே அவரிடம், ‘பதிவு எண்தான் வெளியில் உள்ளது. ஆனால் காரின் உண்மையான எண், என்ஜினிலும், சேசிஸ்ஸிலும் இருக்கும். பதிவு எண்ணை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். என்ஜின் மற்றும் சேஸிஸ் எண்களைத்தான் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். இப்போது அவர் மிகவும் குழப்பமடைந்து விட்டார். தனது எண்கணித குருவிடம் கேட்கச் சென்றார். அவரோ அந்த எண்கள் எல்லாம் தேவையில்லை, பதிவு எண்ணைப் பார்த்தாலே போதும் என்று சொல்லிவிட்டார். என்ஜினிலும் சேஸிஸிலும் எண்கள் இருக்குமா என்றே கூட அவருக்குத் தெரியவில்லை. இது பார்வைக்குத் தெரியுமோ, அது மட்டும் தேவை. எனவே, அவர் என்னிடம் இருந்த காரை வாங்கிக்கொண்டார். அவர் அந்தக் காரை ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்குவதாகச் சொல்லியிருந்தார். நானும் சம்மதித்திருந்தேன். அவர் பணத்தைக் கொண்டுவந்த போது 99999 ரூபாய் தரவேண்டும் என்பதற்காக ஒரு ரூபாய் குரைத்து தர சங்கடமாக இருந்தது. எனவே அந்த ரூபாய்க்கு பதிலாக ஒரு பெரிய பரிசுப் பொருளையும் சேர்த்து கொண்டுவந்திருந்தார். நான் அவரிடம், ‘நீங்கள் எது வேண்டுமானாலும் செய்யுங்கள். இந்தக் காரை நீங்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றால் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்று சொல்லிவிட்டேன்.

பிறகு ஒரு நாள் அவர் காரை ஓட்டிக்கொண்டு செல்லும்போது, பின்னால் சாய்ந்து கொள்ளும் வசதியுள்ள அவரின் இருக்கை திடீரென்று பின்னே நகர்ந்து விட்டது. அவர் மிகவும் பயந்து விட்டார். ஏதோ ஒரு தீய சக்தி அவரைப் பின்னாலிருந்து இழுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டார். ஒருமுறை நான் அவரது இல்லத்திற்குப் போக நேர்ந்தபோது, ‘கார் எப்படியிருக்கிறது’ என்று கேட்டேன். மிகவும் தயங்கித்தயங்கி, ‘அந்தக் கொடிய நிகழ்ச்சி நடந்ததால் காரை விற்றுவிட்டேன்’ என்றார். இருக்கையின் பிடிமானம் எங்காவது அறுந்து பின்னோக்கி நகர்ந்திருக்கக்கூடும் என்பது கூட அவருக்குப் புரியவில்லை.

நீங்கள் எப்போதும் அச்சத்திலேயே வாழ்வதால்தான் ஜோதிடமும் எண்கணிதமும் உங்கள் வாழ்க்கையில் ஆட்சி செலுத்துகிறது. நீங்கள் அன்பிலோ, அமைதியிலோ, ஆனந்தத்த்லோ வாழ்வதில்லை. அச்சத்திலேயே வாழ்கிறீர்கள்ல் அச்சமே உங்கள் வாழ்வின் அடிப்படையாகும் பொழுது ‘நான் என்ன சொல்லியும் உங்களை நம்ப வைத்துவிட முடியும். எதையும் நம்பி விடுவீர்கள். ‘தினமும் வீட்டை விட்டுக் கிளம்பும் போது, உங்கள் சுண்டு விரலை மூன்று முறை வாயில் வைத்துவிட்டுக் கிளம்ப வேண்டும், இல்லையென்றால் என்ன நடக்கும் என்றே தெரியாது’ – இப்படி நான் சொல்லிவிட்டால், அதையும் ஒரு கதையோடு கொஞ்சம் திகிலூட்டும் விதமாகச் சொல்லிவிட்டால் போதும். இப்போது கேலியாகச் சொல்லிவிட்டேன்.

உங்கள் உள்நிலைமீது, உங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. நாம் உருவாக்கிய எண்களும், சில ஜடப்பொருட்களும் உங்களுக்கு மிகவும் முக்கியமாகிவிட்டன. அவையே உங்கள் மீது ஆட்டி செலுத்துகின்றன. இவையணைத்துக்கும் மேலான சக்தி உங்களுக்குள்ளேயே இருக்கிறது. ஆனால் அதன்மேல் உங்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. 1,2,3,4 இப்போது உங்களுக்கு முக்கியமாகிவிட்டது.

இதனை முதலில் உணருங்கள்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்-3


    ஆண்களைவிடவும் பெண்கள் பாலவீனமானவர்கள் என்பதால், பெண்களை உளவியல் ரீதியாகவும் வலிமையிழந்தவர்களாக்கி, ஆன்மிகத்திலும் அவர்களைப் பலவீனப்படுத்தி, பொருளாதாரத்திலும் ஒன்றும் இல்லாமல், ஆக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். இந்த நிலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. எல்லாமே ஆண்களைவிடப் பெண்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்கள் என்கிற ஒரே காரணத்தால்தான் வேறெந்த விதத்திலும் ஆண்கள் பெண்களைவிட மேம்பட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. கொஞ்சம் கூடுதலான வலிமையிருக்கிறது; அவ்வளவுதான். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இது மிகவும் நீளமானதொரு காலம் என்றே கருதுகிறேன். இதுபற்றி கவனம் கொண்டு மக்கள் எதையாவது செய்ய வேண்டும். பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை- ஒவ்வொரு ஆணும் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ளும்வரை அவன் தன்னைத்தானே உணர வாய்ப்பேயில்லை. ஏனெனில், அவனின் பாதியே பெண்மைதான்.

     இந்திய ஆன்மிக உலகில், தன்னை உணருகின்ற விழிப்பு நிலையின் உச்சத்தைத் தொடுதலில், ஆண்களும், பெண்களும் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். உள் நிலையைப் பொறுத்தவரையில் ஆணிற்கு இணையான தன்மை பெண்ணிற்கும் உண்டு என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலேயிருக்கிற தோலைத்தான் ஆண் என்றும், பெண் என்றும் பிரிக்கிறோமே தவிர, உள்ளே இருக்கிற தன்மை ஒன்றுதான். ஆண் தோலா? பெண் தோலா? என்பதுதான் பேதம். உங்கள் ஆன்மிக சக்தியை நிர்ணயிக்கக் கூடியவை இந்தத் தோல்கள் அல்ல. வேண்டுமானால் உடல்கூற்று அளவில் சில பின்னடைவுகள் பெண்களுக்கு இருக்கலாம். ஆனால், உளவியல் ரீதியில் அவர்கள் இன்னும் கூடுதல் வலிமை பெற்றவர்கள். வேத காலங்களிலிருந்தே பெரிய முனிவர்களாகப் பெண்கள் திகழ்ந்திருக்கிறார்கள். வழிபாட்டு முறையின் தொடக்கமே பரம் பொருளை ஓர் அன்னையாக வணங்குவதில்தான் தொடங்கியது. விலையில்லாத இறைத்தன்மையை அன்னையாகத்தான் பார்த்தார்கள். அன்று முதல் இன்றுவரை அது தொடர்கிறது. இன்று கூட பெண் தெய்வ வழிபாடு என்பது ஆண் தெய்வ வழிபாட்டை விட அதிகம் இருக்கிறது. அறியாமையில் இருக்கிற ஒரு மனிதன் கூட, அனைத்துக் கடவுள்களும் தன்னைக் கைவிட்டுவிட்டதாகக் கருதினால், விரைவான நன்மைகளைப் பெறுவதற்கு அம்மன் கோவிலுக்குத்தான் செல்கிறான்.

     வேத காலங்களில் அந்தணர்கள் அணிகிற பூணூலைப் பெண்களும் அணிந்திருந்தார்கள். பூணூல் அணிகிற தகுதி அவர்களுக்கு இருந்தது. ஏனென்றால் பூணூல் இல்லாமல் வேதங்களையோ, இதிகாசங்களையோ படிக்கக்கூடாது என்கிற விதிமுறை அன்றைக்கு இருந்தது. ஆன்மிகம் ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. பெண்களுக்கும்கூட என்பதாஅல் பூணூல் அணிவிக்கப்பட்டிருந்தது. மைத்ரேயி போன்ற பெண் முனிவர்கள் நிறைய பேர் அன்று இருந்தார்கள்.

     ஜனக மகாராஜாவின் அரண்மனையில் ஒருமுறை ஆன்மிக விவாதம் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதில் பங்கேற்க எல்லா முனிவர்களும், ஞானிகளும், சாதுக்களும் கூடியிருந்தார்கள். எது உண்மை, எது போய், என்று கண்டறிவதர்க்கான போட்டி என்றுகூட அதைச் சொல்லலாம். ஜனக மகாராஜா தன்னை உணர்ந்த ஒருவர். தன்னுள் இருக்கும் உண்மையை உணர்ந்த ஒரு அரசர். எனவே, இப்படியொரு விவாதத்தை ஏற்படுத்தி நாட்டில், ஆன்மிகப் பாதையில் இருக்கிற ஒவ்வொரு மனிதரும் பங்கேற்கும் விதமாக அமைத்திருந்தார். விவாதம் தொடரத் தொடர சூட்சும நிலையில் அது நடைபெறத் துவங்கியது. தொடக்கத்தில் அங்கே குழுமியிருந்த அத்தனை பேருமே ஆன்மிக விவாதத்தில் பங்கேற்றார்கள். ஆனால் நேரம் செல்லச் செல்ல பலர் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்களே தவிர, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்களால் உணர முடியவில்லை. அந்த அளவுக்கு விவாதங்கள் சூட்டுமமாய்ப் போய்க்கொண்டிருந்தது. இரண்டே இரண்டு பேர்தான் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒருவர் யாக்ஞவல்கியர், இன்னொருவர் மைத்ரேயி.

     இந்த இருவருக்கும் இடையிலான விவதம் நாட்கணக்கில் தொடர்ந்து நடைபெற்றது. உணவு இல்லாமல், உறக்கம் இல்லாமல் விவாதம் நடந்து கொண்டேயிருந்தது. எல்லோரும் உட்கார்ந்து அதைப் பார்த்து கொண்டிருந்தார்களே தவிர, எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பதுகூடத் தெரியாத அளவுக்குச் சூட்சுமநிலையிலேயே விவாதங்கள் போய்க்கொண்டிருந்தன. இறுதியில் மைத்ரேயி கேட்ட ஒரு கேள்விக்கு யாக்ஞவல்கியரால் பதில் சொல்ல முடியவில்லை. ஆன்மிகப் பாதையில் செல்வதற்காக அரசையே துறந்துவிட்டு வந்த அந்த மானிதர், கூர்மையான மதிக்கு மிகவும் பகழ் பெற்றிருந்த ஆவர், மைத்ரேயியின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையிலிருந்தார். கோபமும், பதட்டமும் அடைந்தார். மைத்ரேயியிடம் சொன்னார்: “இன்னமும் ஒரு கேள்வி கேட்டால் நீ துண்டு துண்டாக வெடித்துவிடுவாய்” என்று. ஜனக மகாராஜா தலையிட்டு, “உங்களுக்கு எல்லாம் தெரிந்திருப்படு போல் ஒரு தோற்றம் இருந்தாலும் வாழ்க்கை அவுல்பவத்துக்குள் அவையெல்லாம் வராததால் கேள்விகளுக்குப் யாக்ஞவல்கியரிடம் பதில் சொல்ல முடியவில்லை” என்றார். குழுமியிருந்த அத்தனைபேர் மத்தியிலும் அவர் மைத்ரேயிக்கு உரிய மரியாதைகள் செய்தார் என்று பார்க்கிறோம்.

     யாக்ஞவல்கியர் தன் குறைகளை உணர்ந்து, மைத்ரேயியின் கால்களில் விழுந்து, தன்னையும் ஒரு சீடராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். மத்ரேயி அவரிடம் சொல்கிறாள்: “நீங்கள் என் சீடராஅக இருக்க வேண்டாம். கணவராக இருங்கள்”, என்று. ஏனென்றால் தன் ஆற்றலுக்கு ஓரளவு இணையாக வருகிற எந்த மனிதரையும் அவள் இதுவரை சந்தித்ததில்லை. அவள் உணர்ந்ததை அவர் உணராவிட்டாலும் கூட, ஓரளவுக்காகவாவது இணையாக வருபவர் யாக்ஞவல்கியர் என்பதால் அவரைக் கணவராகக் கொள்வது என்று மைத்ரேயி முடிவெடுக்கிறாள். பல ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறாள். வேத காலங்களில் ஆண்களுக்கு இருந்த அனைத்து ஆத்ம சாதனைகளும் பெண்களுக்கும் இருந்தன. ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, யாக்ஞவல்கியர் மைத்ரேயிடம் வந்து, “இந்த உலக வாழ்க்கை போதும் என்று கருதுகிறேன், என்னிடம் இருப்பதெல்லாம் உன்னிடம் கொடுத்துவிட்டு நான் கானகங்களுக்குப் போய் என்னை நானே உணர முற்படுகிறேன்” என்று சொல்லுகிறார்.

     உடனே மைத்ரேயி. “இதுபோன்ற சொற்ப விஷயங்களின் பின்னால் செல்வேன் என்று எப்படி நினைத்தீர்கள்? உண்மையான பொக்கிஷத்தைத் தேடி நீங்கள் போகிறபோது, இந்தச் சின்ன சின்னப் பொருட்களைப் பெரிதென்று எண்ணி நான் இருந்துவிடுவேனா?” என்று கேட்கிறாள். பிறகு இருவருமே கானகத்துக்குப் போய் ஞானமடைந்த நிலையிலே வாழ்கிறார்கள் என்று பார்க்கிறோம்.

     இதுபோல ரிறைய கதைகள் உண்டு. இது நமக்கு உணர்த்துவது என்னவென்றால், வேதகாலங்களில் ஆன்மிக வாஅழ்க்கையைப் பொறுத்தவரை பெண்கள் சரிசமமாகக் கருதப்பட்டார்கள் என்பதுதான். இவை மிகவும் சீர்பட்ட சமுதாயங்களாகத் திகழ்ந்தன. சமூகம் சீராக இருந்தாஅல் ஒரு பெண்தான் ஆதிக்கம் செலுத்துவாள். ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்றுகூட அவசியமில்லை. எல்லாஅத் துறைகளிலும் சரிசமமாக அவள் திகழ்வாள். சமூகத்தில் சிக்கல்கள் ஏற்படுகிறபோதுதான், சமூக வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டு, இடப்ப்லெயர்ச்சி நிகழ்ந்து ஆணின் கை ஓங்குகிறது. அத்தகைய சூழ்நிலகளில் ஒரு பெண் பெரிதும் ஆணையே சார்ந்து வாழ்கிறாள். வாழ்க்கை கடுமையாகும்போது ஆண் ஆளுமை செலுத்துவதும், வாழ்க்கை மிகவும் சூட்டுமநிலையிலேயே இயங்குகிறபோது பெண் ஆளுமை செலுத்துவதும் இயல்பு. அந்த நேரங்களில் ஒரு பெண்ணைச் சார்ந்துதான் ஒரு சமூகம் இருக்கும். ஒருவேளை இதனால்தான் ஆண்கள் சமூகத்தில் எப்போதும் குழப்பங்களை மேலும் மேலும் உருவாக்கிக்கொண்டு அதன்மூலம் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்கிறார்களோ என்னவோ?

     கி.மு.3000-த்திலிருந்தே வரலாறு நமக்குச் சொல்வது என்னவென்றால் ஆணும், பெண்ணும் சரிநிகராஅக இருந்து வந்திருக்கிறார்கள் என்பதுதான். அதற்குப் பிறகு ஆசிய நாடுகளில் பல்வேறு பகுதிகளாஅன மங்கோலியாஅ, மத்திய சீனா, இந்தோசீனா போன்ற இடங்களிலிருந்து காட்டுமிராண்டித்தனமான படையெடுப்புகள் நிகழ்ந்த போதுதான் – கொள்ளையடித்து உண்டு வாழும் ஒரு வாழ்க்கை வந்த போதுதான் – பெண் மெல்ல மெல்ல தன் சுதந்திரத்தை இழக்கலானாள். எது கிடைத்தாலும் அள்ளிக்கொண்டு போகிறவர்கள் வந்தவுடன், ஆண்கள் பாதுகாப்புப் பணிகளில் நாட்டம் செலுத்தத் துவங்கினார்கள். எனவே செயல்முறைகள் ஒருதலைபட்சமாகி சாத்திரங்களும், சூத்திரங்களும் கொண்டுள்ள விதிமுறைகள் மாற்றி ஸ்மிருதிகளாக எழுதப்பட்டன. வேதங்கள்தான் ஸ்மிருதிகள். அவை வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பேசுகின்றனவே தவிர, வாழ்க்கை குறித்த எந்த நிர்ணயமும் வகுப்பதில்லை.

     பிறகு ஸ்மிருதிகள் எழுதினார்கள். 50-லிருந்து 60 சதவிகிதம் வரை ஸ்மிருதிகள் ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பதாகவே அமைந்தது. ஒருவேளை அதற்கான கட்டாயம் அப்போது இருந்தது இன்று சொல்லலாம். வெளிச்சூழ்நிலை காரணமாகப் பெண்மீது சில தடைகள் வகுக்கப்படவேண்டியதாக இருந்திருக்கலாம். ஆனால், அவை நிராந்தரமான சட்டங்களாகா மாறியது துரதிர்ஷ்ட்டவசமானது. ஸ்மிருதிகளைப் பொறுத்தவரை பெண்ணுக்கு அதிராகச் செய்த முதல் மாற்றாம் எனபது பெண்கள், ஆண்களைப் போல பூணூல் அணிய முடியாது என்று நிர்ணயித்ததுதான். அது ஒரே நேரத்தில் எழுதப்பட்டிருக்க முடியாது. படிப்படியாகத்தான் நிகழ்ந்திருக்கக்கூடும். மெல்ல அது மேலும் வளர்ந்து, ஒரு பெண் முக்தியடைய ஒரே வழி அல்லது தன்னை உணர்வதற்கான இரே வழி தன் கணவனுக்குப் பணிவிடை செய்வதன் மூலமாகத்தான்; அதைத்தவிர வேறு வழியே இல்லை என்று முடிவு செய்தார்கள்.

    வேதகாலங்க்ளில் ஒரு பெண் தன்னுடைய குடும்ப வாழ்வை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். ஆணுக்கு இருந்த அதே சுதந்திரம் பெண்ணுக்கும் இருந்தது. சமூகத்தில் எந்த ஒரு எதிர்விளைவையும் ஏற்படுத்தாமல், இத்தகைய முடிவுகளைப் பெண்கள் எடுத்ததற்கான பல சான்றுகள் உள்ளன. அது சமூகத்தால் ஏற்கப்பட்டது. ஒரு பெண் தான் விரும்பிய கணவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள். அந்த எல்லை தாண்டி அவள் வளர்ந்துவிட்டதாகக் கருதினால், அக்குடும்பம் என்கிற அமைப்பைவிட்டு ஒரு ஆண் வெளிவருவதைப் போலவே பெண்ணும் வெளிவந்து கொண்டிருந்தாள். ஆண் ஒருவனுக்குத் திருமணம் ஆகிறது. பத்து, இருபது ஆண்டுகள் குடும்பம் நடத்துகிறான். பிறகு ஆன்மிக நாட்டம் வருகிறது. குடும்பத்தை துறந்துவிட்டுப் போகிறான். அதே உரிமை ஒரு பெண்ணுக்கும் இருந்தது. ஆன்மிகப் பாதையில் செல்லவேண்டும் என்ற நாட்டம் அவளுக்கு வந்தபோதெல்லாம் குடும்பத்தைத் துறந்துவிட்டு அவள் சென்றிருக்கிறாள். இது வேதகாலத்தில் முழு மனதோடு ஏற்கப்பட்டிருக்கிறது.

     காலப்போக்கில் யாரோ துறவு மேற்கொள்வது ஆணுக்குத்தான் சாத்தியம் என்று வரையறுத்துவிட்டார்கள். இது பற்றி யாருமே கேள்வி எழுப்புவது இல்லை. ஒரு ஆண், ஒரு பெண்ணைத் துறந்துவிட்டு ஆன்மிகப் பாதையில் போகலாம். தன்னிடம் இருப்பது எதையும் துறப்பது எல்லாருக்கும் உள்ள உரிமைதானே. ஒரு ஆண் ஒரு பெண்ணைத் துறந்துவிட்டால் அந்தப் பெண்ணை யார் பார்த்துக்கொள்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளுக்கு விடையே இல்லை. இதை அப்படியே விட்டு விட்டார்கள். இருவருக்கும் அதே சுதந்திரம் இருந்தால் அது வேறு. ஒருவருக்கு மட்டும் இந்தச் சுதந்திரம் இருந்து, இன்னொருவருக்கு இல்லாதபோது அது தீமையிழைப்பதாகத்தான் இருக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக அப்படியொரு சட்டம் போடப்பட்ட பிறகுதான் மகிழ்ச்சியாகச் சேர்ந்து வாழ்கிற ஆண்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

     ஆமாம்! ஏனென்றால், இரண்டு பேர் முழு மகிழ்ச்சியாக- ஆனந்தமாக சேர்ந்து வாழ்வது எப்போது சாத்தியமென்றால், அவர்கள் சுதந்திரமான நிலையில் சந்திக்கிறபோதுதான். ஒரு கட்டுப்பாட்டுடன் சந்திக்க நேருமானால், பிறந்த நாள் முதல் அடிமையாகவே இருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்ய நேர்ந்தால், அந்தப் பெண்ணை உங்களுக்கு அடிமையாக இருக்கத்தான் பழக்கியிருப்பார்களே தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருவேளை அதிக பட்சம் அந்த வாழ்க்கை அவளுக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் வாழ்க்கை ஆனந்தமாக இருக்க முடியாது. அவள் வசதியாக இருப்பாள். உங்கள் தேவைகளைப் பார்த்துக்கொள்வாள்.. அவ்வளவுதான்.

     துரதிர்ஷடவசமாக இன்று கூட இதுதான் தொடர்கிறது. ஒரு உயிர், பெண்ணாகப் பிறந்த உடனேயே, ஒன்று தன் தந்தைக்கு அல்லது கணவனுக்குச் சேவைகள் செய்வதற்குத்தான் அந்த பிறப்பே எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதைத் தாண்டி எதுவுமேயில்லை என்பதுபோல் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் இதைச் சொல்பவர்கள் யாரென்றால் அத்வைதம் பேசுகிறவர்கள் தான் இதைச் சொல்லிக் கொடுக்கிறார்கள். “உலகில் எல்லாமே ஒன்றுதான். ஆனால், ஆண்களைவிடக் குறைந்தவள் பெண்.” இது, அவர்களுக்கு எப்படித் தோன்றியது என்று எனக்குப் புரியவில்லை. பிறப்பிற்குக் காரணமான பாலியல் ரீதியான வேற்றுமையைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத யாருமே அத்வைதிகளாக இருக்க முடியாது. ஆணுடைய வாழ்க்கை பெண்ணைச் சார்ந்தே இருக்கிறது. எனவே அவளை ஒப்புக்கொள்ள இயலாவிட்டால், வாழ்க்கையின் அனைத்து இருமைகளையும் ஒன்றாக ஏறுக்கொள்வதென்பது சாத்தியமே இல்லாத ஒன்று. மனித குல வாழ்க்கையிம் ஆதாரங்களில் ஆணைவிட, பெண்ணுக்குத்தான் அதிகப்பங்கு இருக்கிறது. ஆணுக்குப் பங்கு ஒரு அளவு வரைதான். எனவே, பெண்ணை ஏற்றுக்கொள்ளாத போது, ஆண் மிகவும் குறுகிய மனப்பான்மை கொண்டிருக்கக் கூடும், அல்லது அறியாமையில் இருக்கக் கூடும். அனால் இவை எல்லாமே சில வசதிகள் கிடைக்கின்றன என்பதனால் இருக்கின்ற குறுகிய மனப்பான்மைகள் தான். என்ன நந்தாலும் வசதியாக இருந்தால் எதற்காக அதை விட்டுக் கொடுப்பது? அது சரியா? தவறா? என்ப்லதெல்லாம் கேள்வியல்ல. அதில் நன்மை கிடைக்கிறது என்றால் ஏன் விடவேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மனநிலை மாறாவிட்டால் அங்கே ஆன்மிகம் இருக்காது. அங்கே ஆன்மிகம் இருக்க வழியே கிடையாது.

     இன்றுகூட நாம் பார்க்கிறோம், அம்மன் கோவில் முன்னால் போய் விழுந்து கும்பிடுகிற ஒரு ஆண் வீட்டுக்குப் போய் மனைவியை அடிக்கிறான். அவன் அறியாம கொண்டவன் மட்டுமல்ல; நேர்மையில்லாதவன். குறுகிய மனப்பான்மை இல்லாவிட்டால் இப்படியொரு பார்வை வாராது.

     அதேபோல் ஆண் செய்வதை எல்லாஅம் பெண்ணும் செய்வது என்று வந்தால் அதுவும் சரியாக இருக்காது. அது மிகவும் ஆபாசமாகத்தான் இருக்கும். மேற்கில் இதுதான் நடக்கிறது. இங்கேயும்கூட இது ஒரளவு இருக்கிறது. ஆக பெண்கள், முயற்சி செய்து வருகிறார்காள். அது நிகழ்ந்தால் இரு சாராருக்குமே சேதம்தான் அதிகம். ஒரு பெண், பெண்தன்மையை இழந்தால் அது மிகவும் அசிங்கமாக இருக்கும். ஆண் போல ஆகவேண்டும் என்று பெண் நினைப்பதே தவறு. அவள் ஏன் ஒரு ஆண்போல ஆகவேண்டும்? ஏனென்றால், அவளுக்குள்ளேயே ஏதோ ஓரிடத்தில் தான் தாழ்ந்தவள் என்றும்; ஆண் உயர்ந்தவன் என்றும் ஒரு எண்ணம் இருக்கிறது. எனவே ஆண்போல ஆக அவள் நினைக்கிறாள்.

     அவளது இந்த எண்ணம் மாறினால் மட்டுமே, உன்னதமடைய முடியும்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்! - 2


     எப்பொழுதும் இவ்வுலகம் மிகச்சிறந்த இடமாகத்தான் இருந்திருக்கிறது. இந்த உலகத்தைப் பற்றியோ, மற்ற கிரகங்களைப் பற்றியோ நமக்குத் தெரிந்த வகையில் மற்றா எல்லா கிரகங்களைக் காட்டிலும் இவ்வுலகமே மிகச்சிறந்த இடமாக இருக்கிறது. பேராசை கொண்டு இந்த முட்டாள்கள் தான் சிறிதும் விழிப்புணர்வில்லாமல், மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என எண்ணிக் கொண்டு, மற்ற அனைத்து உயிர்களையும் கொன்று குவித்துக்கொண்டேயிருந்தார்கள். ஆனாலும், அந்த மனித குல நன்மை என்பது இன்றளவும் ஒரு கனவாகவே இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மற்ற உயிர்களைப் படுகொலை செய்த பிறகும், பல மனிதப் படுகொலைகளுக்குப் பிறகும் மனிதகுல நன்மை என்பது இன்னும் தொலைதூரத்திலேயே உள்ளது. மனிதன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுபிட்சமாக இருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நம் வெளிப்புறச் சூழ்நிலையை மிக அதிகமாக மாற்றியிருக்கிறோம். இருந்தும் மனிதகுல நன்மை அல்லது சுபிட்சத்தின் அருகில் நாம் இல்லை.

     ஆகவே, மனிதகுல நன்மைக்கு என்ன செய்யவேண்டும் எனக் கண்டுகொள்ள நமக்குள் பார்த்து கட்டாயமாக்க இதுவே சரியான நேரம். உங்கள் உள்தன்மை மாறினால்தான் உண்மையான நலம் ஏற்படும் என்பதை உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து நீங்கள் உணர முடியும். தற்பொழுது உங்கள் வாழ்க்கையின் தரத்தை, நீங்கள் அணியும் உடையோ, உங்களின் கல்வித் தகுதியோ அல்லது உங்கள் குடும்பப் பின்னணியோ, வங்கிக் கையிருப்போ நிர்ணயிப்பதில்லை. இந்தக் கணத்தில் நீங்கள் உங்களுக்குள் எந்த அளவுக்கு அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறீர்களோ அது மட்டும்தான் உங்காள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.

   ஆகவே, யோகாவும், தியானமும் உங்கள் உள்தன்மையைக் கையாளுகிற அறிவியலின் ஒரு பரிமாணம் ஆகும். இங்கு நீங்கள் வாழ்க்கையை அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதற்குரிய சரியான உட்புறச்சூழலை உருவாக்குவதே அதன் முக்கிய நோக்கம். வேறுவிதமாகச் சொன்னால் நீங்கள் மிகவும் நன்றாக வாழமுடியும். நீங்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் மாறிவிட்டால் சுபிட்சமடைந்து விட்டதாக கருதுவீர்களா? ஆகவே, யோகா மற்றும் தியானம் என்று சொல்வது சரியல்ல. யோகா என எதைச் சொல்கிறீர்களோ அதில் தியானமும் அடங்கியுள்ளது. முன்பு எப்போதும் இருந்ததைவிட இந்தக் காலகட்டத்தில் யோகா அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முந்தைய காலத்தில் முக்கியமாக இல்லையென நான் கூறவில்லை. ஏன் இதைக் கூறுகிறேனென்றால், இன்று உலகில் பல செயல்கள் செய்வதற்குச் சக்திவாய்ந்த கருவிகளைக் கொண்டுள்ளோம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் நீங்கள் விரும்பினால் மலையை நாளையே தரைமட்டமாக்க முடியும். இந்த மாதிரியான ஒரு சக்தி நம் கையில் இருக்கும்பொழுது, உள்நிலை புத்திசாலித்தனமும் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வும் மற்ற உயிரினங்களை நமக்குள் ஒரு பாகமாக உணருகின்ற தன்மையும் நமக்கு இருப்பது மிக மிக அவசியமாகிறது. இல்லையெனில் உங்களுக்கே நீங்கள் மிகப்பெரிய சேதத்தை விளைவித்துக் கொள்வீர்கள். அந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான் இப்பொழுதும் இருக்கிறீர்கள்.

     சுவாசிப்பதே பிரச்சினையாகும் அளவிற்கு நீங்கள் தேசத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு எந்த உலகத்தில் உயிர்வாழ்வதே பிரச்சினையாக ஆகிக்கொண்டு வருகிறது. வெளிப்புற அறிவியலைச் செயல்படுத்தியதால் மட்டுமே இந்த மாதிரி நடந்திருக்கிறது. சரியான உள்சூழலை உருவாக்கக் கூடிய உள்நிலை அறிவியலை நீங்காள் கவனிக்கவேயில்லை. ஆகவே, நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் யோக அறிவியல்தான் உன்பு எப்போதையும்விட இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவையாக இருக்கிறது. நீங்கள் சக்தியுடன் இருப்பதால், நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பது மிகவும் முக்கியமாகிறது.

     இது எனக்கு இக்கிரகத்தில் வாழ்ந்த மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களைப் பற்றி நினைவூட்டுகிறது. சர்வாதிகாரிகள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். ஒருநாள், முசோலினி அனைத்து இத்தாலிய புகைவண்டிகளையும் குறித்த நேரத்தில் ஓடும்படிச் செய்தார். ஒருசில புகைவண்டி ஓட்டுநர்களைச் சுட்டதன் மூலம் இதை அவர் நடத்திக் காட்டினார். இத்தாலியில் அனைத்து புகைவண்டிகளும் குறித்த நேரத்தில் ஓடத் தொடங்கின. அவர்கள் வரலாற்றில் அதுபோல இதற்கு முன்பு நடந்ததேயில்லை. ஆனால் திடீரென்று நடக்கத் தொடங்கியது. இதனால் முசோலினி புளகாங்கிதம் அடைந்து அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டபொழுது ஒரு புதுபிரச்சினை உருவானது. தபால் தலைகளெல்லாம் அஞ்சல் உறையின் மீது இல்லாமல் கீழே விழுவதும், தபால் பைகளில் சேர்வதுமாக நடந்தது. இது முசோலினியின் கவனத்திற்கு வந்த பொழுது தபால்துறைத் தலைவரை அழைத்து " நீங்கள் ஏன் உயர்ந்த ரக பசையை உபயோகிப்பதில்லை" எனக் கேட்டார். அதற்குத் தபால் துறைத் தலைவர் மிகுந்த பயத்துடனும், தயக்கத்துடனும் "உயர்ந்த ரக பசையைத்தான் உபயோகிக்கிறோம், ஆனால் மக்கள் தபால்தலையின் முன்பக்கத்தில் தான் எச்சிலைத் தடவுகிறார்கள்." என்று கூறினார்.

     ஆகவே, நீங்கள் சரியான திசையில் செல்ல இதுவே தருணம். நவீன விஞ்ஞானம் உங்களுக்களித்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தியே உண்மையான மனிதகுல நன்மையை அடைவதற்கேதுவான பரிமாணத்தை யோக அறிவியல் உங்களுக்குள் திறக்கச் செய்யும்.

உனக்குள் இருக்கிறது உன்னதம்! - 1


****************************************************************
‘உனக்குள் இருக்கிறது உன்னதம்’ என்ற இக்கட்டுரையை சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் சொற்ப்பொழிவுகளில் இருந்து தொகுக்கப்பட்டதாகும். அது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. எனக்கு கிடைத்த அந்த பொக்கிஷம் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் இந்த வலைப்பூவில் அரங்கேற்றுகிறேன். நன்றி. – கவிப்ரியன்.
**************************************************************** 
     ஆத்ம சாதனையில் ஒரு பிரம்மச்சாரி ஈடுபடுவதற்கும், இல்லறத்தில் இருப்பவர் ஈடுபடுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இல்லறத்தில் இருப்பவர் ஆத்ம சாதனையில் ஈடுபட பலரது அனுமதியையும் பெற வேண்டும். அவர்கள் அனுமதி தரலாம்; தராமலும் போகலாம். இல்லறத்தில் அத்தகைய சிக்கல்கள் உண்டு. ஆனால் ஒரு பிரம்மச்சாரி தானாக முடிவெடுக்கலாம். குறிப்பிட்ட சில ஆத்ம சாதனைகளை மேற்கொள்வது இல்லறவாசிகளுக்கு சிரமமாக இருக்கும். அதற்குத் தேவையான சூழலை உருவாக்க முடியாது. அப்படியானால் உண்மையை உணர்ந்திட எல்லோருமே பிரம்மச்சாரியாக வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அப்படியொன்றும் அவசியமில்லை. உள்நிலையிலிருக்கும் உண்மையை உணர்வதற்கு வெளிச்சூழல் எப்படியிருந்தால் என்ன? நமக்கு எப்படித் தேவையோ அதற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.

     சிலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். சிலர் பிரம்மச்சாரியம் மேற்கொள்கிறார்கள். இரண்டில் எது சரி, அது தவறு? அல்லது இரண்டில் எது சிறந்தது? இப்ல்படி எதுவுமேயில்லை. ஒவ்வொருவருமே தங்கள் தனிமனிதத் தேவைகளுக்கு ஏற்ப வாழ்கிறார்கள். சிலருக்குத் திருமணம் தேவையில்லை. எனவே பிரம்மச்சரியம் மேற்கொள்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே விதிகள் இருப்பது சாத்தியமில்லை. திருமணம் தேவைப்படுபவர்களுக்குப் பிரம்மச்சரியம் தரப்பட்டால் அவருக்கு அது நரகம். திருமணம் வேண்டாதா ஒருவர் திருமண பந்தத்திற்குள் திணிக்கப்பட்டால் அவருக்கு அது வேறுவிதமான நரகம். அவருக்கு மட்டுமன்றி அவருடன் திருமண பந்தத்தில் இணைபவருக்கும் அது ஒரு நரகமாகத்தானிருக்கும்.

     பலரும் இந்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். செம்மறி ஆடுகள் போல் வாழ்ந்திருக்கிறார்கள். தங்களுக்குத் திருமணம் வேண்டுமா? வேண்டாமா? என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை.  எல்லோருக்கும் திருமணமானதால் இவர்களும் திருமணம் செய்துகொண்டார்கள். அதற்கான தேவையிருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் ஆழமாகச் சிந்திக்கவேயில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த ப்ந்தம் அவருக்குத் தாங்க முடியாத சுமையாகிவிடுகிறது. திருமணத்தோடு சேர்ந்து வரும் மற்ற பொறுப்புகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. திருமணம் என்றால் வாழ்க்கை முறையிலேயே நிறைய மாற்றங்கள். இந்த மாற்றங்களை எதிர்கொள்வதற்கும், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும் முழுமையாகத் தயார் செய்துகொண்ட பிறகுதான் திருமணபந்தத்திற்குள் ஒருவர் நுழைய வேண்டும் அல்லவா? அது ஒரு நாளில் முடிந்துவிடுகிற விஷயமல்ல; அத்தோடு சேர்த்து பல விஷயங்கள் உள்ளன.

     நீங்கள் என்ன செயல் செய்தாலும், அதன் தொடர்ச்சியாக நிறைய விளவுகள் இருக்கும். உள்ளபடியே நீங்கள் அறிவாளியாயிருந்தால், அந்தச் செயல்களுக்கான விளைவுகளுக்கு நீங்கள் தயாரா என்று ப்லார்த்து, அது உங்களுக்குத் தேவையா? இல்லையா? என்று முடிவு செய்வீர்கள். விளைவுகளைச் சந்திக்க நீங்கள் தயார் என்று முடிவெடுத்து, அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். இதை சிந்தித்துதான் நீங்கள் முடிவவ செய்ய வேண்டும். எல்லோருக்கும் பொதுவான ஒன்றை நீங்கள் உங்களுக்காக  நிர்ணயிக்க முடியாது.

     ஒரு தம்பதியின் 25-வது திருமண நாளில் நடந்தது இது. மணவாழ்க்கை எந்த நிலையிலிருந்தாலும் திருமணநாளைக் கொண்டாடியே தீரவேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகள் எப்படியிருந்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல; ஆனால் திருமண நாளைக் கொண்டாடிவிட வேண்டும் இல்லையா? இந்த மனிதர் அழுது கொண்டிருந்தார். மனைவி சொன்னாள்:- "நம்ப முடியவில்லையே! நம் திருமணம் பற்றி இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்களே" என்று. கணவர் சொன்னார்:-" இல்லை ... உன் அப்பா ஒரு நீதிபதி. நான் உன்னுடன் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் என்மீது ஏதாவது வழக்குப் போட்டு 25 ஆண்டுகள் சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார். அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தால், எனக்கு இன்றோடு விடுதலை கிடைத்திருக்கும். சுதந்திர மனிதனாக இருந்திருப்பேன்" என்றார்.

     எங்கோ தவறு நடந்து எல்லாம் துயராயம் ஆகிவிடுகிறது. அதற்காக திருமணமே தவறு என்று பொருளல்ல. அது இரண்டுபேர் ஒருவிதமான பகிர்தலோடு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு. அது வாழ்வதற்கான ஒரு நல்ல வழி. அதன்மூலம் அற்புதமான ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் போதிய மனமுதிர்ச்சியில்லாதவர்கள் அளவுக்கதிகமான பற்றுதலை வளர்த்துக்கொண்டு, ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ள முனைந்தால திருமணம் தோல்வியடையும். நீதிமன்றம் வரை போகாவிட்டாலும, தனி வாழ்க்கையிலாவது தோல்வியிருக்கும்.

     நீங்கள் எதுவுமே அறியாத முட்டாளாக இருந்தால் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் முழுமையாகச் சரணடைந்திருந்தாலும் சிக்கலில்லை. அல்லது இருவருக்குள் எது நடந்தாலும் அதை அற்புதமாக உணருமளவுக்கு மிகுந்த அன்புடன் வாழ்ந்தாலும் சரி; இல்லையென்றால் திருமண வாழ்க்கை சாத்தியமேயில்லை. சமூகப் பொறுப்புகள் கருதி இரண்டுபேர் ஒட்டுதல் இல்லாமல் ஒன்றாக வாழ்வது பைத்தியகாரத்தனம். அவர்கள் ஒருவர் வாழ்வை ஒருவர் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.

     ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இது பொருந்தும். இளமையில் அவர்கள் உயிரோட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் கதையே வேறு. கல்லூரிகளில் கூட பார்த்திருக்கிறேன். இந்தக் காதலர்கள் ஒருவருக்காக ஒருவர் பிறந்ததுபோல் எண்ணுகிறார்கள். பெரும் எதிர்ப்ல்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்ய்து கொள்ளுகிறார்கள். பெற்றோரை எதிர்த்து சமூகத்தை எதிர்த்து திருமணம் நடந்தேருகிறது. உற்சாகமும், உயிரோட்டமுமாய் இருந்த இவர்கள் திருமணமாகி ஐந்தாறு வருடங்களிலேயே துன்ப்ல்லமயமாகி விடுகிறார்கள். அவர்கள் முகத்தில் சோகம் கவிழ்ந்திருக்கிறது. உயிரோட்டம் காணாமல் போய் விடுகிறது. இத்தகையவர்களைப் பார்ப்பதே துயரமானது. அந்த உறவை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, அதை மூலதனமாகப் பார்க்கத் தொடங்கும்போதே வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடுகிறது.

     யாரையாவது நீங்கள் நேசித்தால் அதை ஒரு முதலீடாக மாற்ற நினைக்கிறீர்கள் இல்லையா? ஏன்? அதிலிருந்து அனைத்து விதமான பாதுகாப்புகளையும் பெறமுடியும். ஆனால், அந்த உறவின் சாரம் அத்தோடு முடிந்துவிடுகிறது. அந்த் நேசத்தைப் பயன்படுத்தி, எதையாவது பெற முயற்சி செய்தீர்களேயானால், அங்கே நநசம் அழிந்துவிடும். பெற்றுக்கொள்கிற விஷயம் மட்டுமே இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இதை செய்ய எல்லோருமே முயற்சிக்கிறார்கள். அதற்கென ஒரு பெரிய விலை கொடுக்க நேர்ந்தாலும் யாரும் அதுபற்றிப் புரிந்துகொள்வதில்லை. அப்படட கொடுக்கக்கூடிய பெரிய விலை உங்கள் வருத்தமும் துயரமும் தான். இதனால் உங்களது நேசத்தை இழக்கிறீர்கள். அதிலிருக்கிற ஆனந்தத்தையே இழக்கிறீர்கள். நேசத்தையே இழந்தபிறகு வேறு என்ன விலை கொடுக்க முடியும். இதைவிட நரகம் உண்டா என்ன? குறைந்தது கல்லூரிக் காலங்களில் ஏற்பட்ட காதல் அனுபவங்களை நினவுகூர்ந்தால் அது ஆனந்தத்திற்கு ஒரு மூலமாக இருந்திருக்கும் இல்லையா? ஆனால் உங்கள் கனவுகள் நனவானபோது அதை வியாபாரமாக்க முயற்சித்தீர்கள். உங்கள் வாழ்விலே ஒரு அற்புதமான மனிதர் என்று நினைத்தவர் மிக மோசமான மனிதராக ஆகிவிட்டால்? இப்படி நிகழ்வ்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் தலைமுறை தலைமுறையாக இது இப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது.

     இதுதான் மாறுவதற்கான நேரம். உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள உங்களுக்கு இது வேண்டும், அது வேண்டாம் என்பதை நீங்கள் தீர்க்கமாக முடிவு செய்ய இதுதான் உகந்த நேரம்.

DYANALINGA AT VELLIANGIRI

DYANALINGA TEMPLE AT VELLIANGIRI VALLEY - COIMBATORE, SOUTH INDIA.
SATHGURU JAGGI VASUDEV - FOUNDER.












பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-7

புற உலகு புகும் இரகசியம்
பிரபஞ்சத்தின் இயக்கங்களை ஆள்வதற்காக, அதிதேவதைகள் எனும் சக்திவாய்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நெருப்பு, காற்று, மின்சாரம், இரவு, பகல் முதலியவற்றிற்கு தேவதைகள் ஆளுநராக இருப்பதை உணர்ந்த பக்குவப்பட்ட யோகிகள், இத்தேவதைகளின் நல்லுறவோடு, தமது உடலை தகுந்த நேரத்தில் நீத்து, பௌதிக உலகின் உயர் கிரகங்களுக்கோ அல்லது ஆன்மிக புற உலகுக்கோ செல்ல வழி செய்து கொள்கின்றனர்.

"யாகம், தானம், தவம் முதலான நற்காரியங்கள் புரிவதால், நல்ல சந்தர்ப்பத்தில் உடலை விடும் யோகிகளல்லாத பிறரும், உயர்கிரகங்களை அடைகின்றனர். எனினும் இவர்கள் பூமிக்குத் திரும்பிவர வேண்டியவரேயாவர். 'தூமா' எனும் சந்திரனற்ற மாதப்பகுதியில், சூரியன் தனது தென் திசைக்கதியிலியங்கும் நேரத்தில் இவர்கள் உடல் நீக்குகின்றனர்."

தனியாக ஒருவர் தான் விரும்பும் ஒரு கிரகத்தை அடைதல் சாத்தியமே எனினும், இது மனத்தின் மனோதத்துவ மாற்றத்தால் மட்டுமே முடியும். ஜட உடலின் உட்கரு மனமே. மனத்தின் எண்ணங்களின் மாற்றத்தை அதாரமாகக் கொண்டு ஜட உடலின் பரிணாம முன்னேற்றம் நிகழ்கிறது. ஒரு புழுவின் உடலுருவிலிருந்து வண்ணத்துப்பூச்சியின் உடல் தோன்றுதலும், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக மாறுவதும் மனோதத்துவ மாற்றங்களையே பெரும்பாலும் பொறுத்திருக்கின்றன.

மரணத்தின்போது, பகவான் இறைவனின் இடத்தில் மனத்தை நிறுத்தி, உடலை விடுபவர்கள் உடனேயே ஆன்மிக உலகின் உன்னத நிலையை அடைவர் என்று கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஜடத்திலிருந்து மனத்தை பகவானின் திவ்விய ரூபத்தை நோக்கி திருப்பப்பழக்கப்படுத்திக் கொள்வதற்கான பக்தி சேவையின் நியமங்களை அனுசரிப்பவர் எவராயினும் ஆன்மிகப் புறவெளியில் ஆண்டவனின் அகக்ரகத்தை அடைவது சுலபம்.

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-6

ஜட உலகம் அழிவுக்குட்பட்ட இயற்கையை உடையது. பௌதிக ஆன்மிக உலகங்கள் மோதலால் பெரு நாசம் உண்டாகும் என்ற பௌதிக விஞ்ஞானிகளின் கூற்றில் சிறிது உண்மை இருக்கின்றது. பௌதிக உலகானது இயற்கை நிலைகளால் உண்டாக்கப்படுவதாக இருக்கின்றது. இந்த நிலைகள் ஸத்வம் (நற்குணம்), ரஜஸ் (தீவிரம்), தபஸ் (அறியாமை) என்பனவாம். இந்த ஜட உலகம் தீவிர குணத்தால் படைக்கப்பட்டு, நற்குணத்தால் காக்கப்பட்டு, அறியாமையால் அழிக்கப்படுகின்றது. இக்குணங்கள் சர்வமயமாயிருப்பதனால், ஒவ்வொரு கணமும், நிமிடமும், மணிநேரமும், ஆக்கலும் காத்தலும், அழித்தலும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

இவ்வுலகின் மிக உயர் கிரகமான பிரம்ம லோகமும் இவ்வியற்கை நிலைக்குட்பட்டதேயாம்.

நற்குணத்தின் ஆதிக்கத்தால் 43,00,000 x 1000 x 2 x 30 x 12 x 100 கதிரவ வருடங்களுக்கு இங்கு வாழ்நாள் நீடிக்கிறது. இந்த நீண்ட வாழ்நாளைக் கொண்டபோதும் இவ்வுலகம் அழிவுக்குட்பட்டதேயாம். பௌதிக உலகில், பூமியில் வாழும் நாட்களுடன் ஒப்பிடுகையில் வினோதமாகப் பெருகிய காலத்தைக் கொண்ட வாழ்நாள் இருப்பினும் பிரம்ம லோகத்து வாழ்வு, ஆன்மிக உலக வாழ்வின் ஒரு துளிபோன்றதேயாம்.

பௌதிக உலகின் அழிவு இருவிதமாய் உண்டாகிறது. 43,00,000 x 1000 சூரிய வருடங்களுக்கொரு முறை, பிரம்மலோகத்தின் ஒவ்வொரு தினத்தின் முடிவுலும், பகுதிப்பிரளயம் ஏற்படுகின்றது. இப்பிரளயத்தின் போது உயர்க்கிரகங்களான பிரம்மலோகம் போன்றவை அழிவுறுவதில்லை. ஆனால் 43,00,000 x 1000 x 2 x 30 x 12 x 100 கதிரவ வருடங்களுக்கொரு முறை முழுப்பிரளயம் ஏற்படும் போது, பிரபஞ்சம் முழுவதுமே, பௌதிக மூலாதார தத்துவங்கள் உருவாகும் ஆன்மிகப் பெருவுடலோடு ஒன்றிவிடுகின்றது. எனினும் ஜடவெளியிலிருந்து வெகு தொலைவிலுள்ள ஆன்மிக உலகு அழிவுறுவதில்லை. அது பௌதிக உலகங்களை தன் வயப்படுத்திக்கொள்கின்றது. இவ்வுண்மையை ஆன்மிக த்த்துவத்தின் நிர்ணயங்களை உணர்ந்தறிந்த முக்தர்களின் இழுக்கற்ற ஆதாரத்திலிருந்தே அறியமுடியும்.

இவ்விதமாக வேத ஞானமானது ஜடவுலகின் முதல் உயிர்வாழியான பிரம்மாவின் இதயத்தில் அறிவுறுத்தப்பட்டது. நாரதருக்கு இந்த ஞானம் பிரம்மாவால் வழங்கப்பட்டது. இதுபோன்றே பகவத் கீதையின் ஞானம் விவஸ்வான் எனும் சூரியதேவதைக்கு ஸ்ரீகிருஷ்ணனால் வழங்கப்பட்டது. இந்த சீடப்பரம்பரையின் தொடர்பு விட்டுபோனபோது மீண்டும் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யப்பட்டது.

ஆன்மிக உலகின் விவரங்களை அறியுமுன்பு ஒருவன் தனது இதயத்தையும், பழக்கவழக்கங்களையும் முழுமையாகத் தூய்மைப்படுத்திக் கொள்ளல் அவசியம். பக்குவப்பட்ட யோகியும், புதிய பயிற்சியாளனும் பழகும்படியாக 'பக்தியோகம்' உன்னதமான தெளிவான விஞ்ஞன வழியாக விளங்குகின்றது.

பரமபுருஷனான பகவான், வேறெந்த பலனுமின்றி ஒருவனால் சேவை செய்யப்படுகையில் பௌதிக உலகின் விஷயங்கள் தாமாகவே ஒளியூட்டப்படுவதோடு உலகாயதமான விதத்தில் செயலாற்றாமலே பக்தனின் உள்ளம் வளம்பெறுகின்றது. இதுவே பகவத் கீதையின் ரகசியமாகும். இது அனைத்து உயிர்வர்க்கங்களுக்கும் பொருந்தும்.

புற உலகு புகும் வழி
ஆன்மிக உலகங்களிற் புகுவது, ஜட உபகரணங்கள் மூலமாக அல்லாமல் வேறுபட்டதாக இருக்கின்றது. இவ்வுலகில் வாழும்போதே ஆன்மிக சேவைகளிலீடுபட்டு உயிர்கள் புற உலகு புகும் பேறு பெறலாம்.
ஆனால் உலகாயதவாதிகள் சோதனை செய்தறியும் அறிவில் முழு நம்பிக்கை கொண்டவரும் பழுத்த பௌதிக வாதிகளுமானவர் ஆன்மிக புற உலகு புக மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் விண்கலங்கள் பௌதிக உலகின் வேறு கிரகங்களையே அணுக இயலாதவைகளாக இருக்கையில், பௌதிக அண்டங்களுக்கப்பால் வெகு தொலைவில் உள்ள சேதனப் புறவெளியை அடைய இயலாததாகும். பௌதிக உடலைக்கட்டுப்படுத்த இயன்ற யோகிகளுக்கு கூட இந்தப்பிரதேசம் புகமுடியாததாகும்.

ஆன்மிக சேதனத்தை கட்டுப்படுத்தி இயக்கி, ஒரு குறிப்பிட்ட சமயத்தில் தன்னிச்சையாக உடலைவிட்டுப் போகும் சித்தர்கள், பௌதிக ஆன்மிக உலகுகளை இணைக்கும் ஒரு தனிப்பாதை வழியாக ஆன்மிக உடலை அடைய முடியும். இப்படி முயலுபவர்கள் கூட கீதையில் குறிப்பிடப்பட்ட முறையை பின்பற்றுகின்றனர்.

"உன்னதத்தை உணர்ந்து கொண்டவர்கள், உத்தராயணம் எனும் சூரியன் தனது வடதிசைக் கதியிற் செல்லும் காலத்தில் நெருப்பு, ஒளி இவற்றின் அதிதேவதைகளால் வாயுமண்டலம் ஆதிக்கப்படுத்தப்பட்ட சுபநேரத்தில் உடலை நீத்து, ஆன்மிக உலகை அடைய இயலும்."

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-5

உயிருள்ள உடலின் இந்த விதமான விவரிப்பு, சக்தி இருவிதங்களில் உள்ளது என்ற விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிச்சயப்படுத்துகிறது. இவ்விரு சக்திகளிலொன்றான சேதனம் ஜட உடலைவிட்டுப் பிரிக்கப்படும்போது, பின்னது எல்லாவிதங்களிலும் உபயோகமற்றுப் போகின்றது. எனவே சேதன அங்கமென்பது ஜடசக்தியைக் காட்டிலும் உயர்ந்தது என்பது தெளிவாகின்றது.

"எனவே, ஜடசக்தியின் நஷ்டத்தை எண்ணி, எவரும் கலங்குதலாகாது. வெப்பம், குளிர், இன்பம், துன்பம் என்ற வகைவகையான புலன் நுகர்ச்சிகளெல்லாம், வந்துபோகக்கூடிய, ஜடசக்தியின் இடை விளைவுகளேயாம். நிலையற்ற இவ்வித ஜட இடைவிளைவுகளின் தோற்றமும் மறைவுமே, 'ஜீவன்' என்றழைக்கப்படும் உயிர்ச்சக்தியினாலேயே பௌதிக உடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நிச்சயப்படுத்துகிறது.

இன்பமும், துன்பமும் கீழ்த்தரச்சக்தியின் இடை விளைவுகளால் ஏற்படும் பௌதிக நிலைகளே என்பதை அறிந்துகொண்ட மதிநலம்பெற்றவன், நிலையான, உண்மையான ஞானம் முழுமைபெற்ற, ஆனந்தமயமான வாழ்வைக் கொண்ட ஆத்மிக உலகை அடையத் தகுதி பெறுகிறான்.

சேதன உலகு இங்கு விவரிக்கப்படுவதோடு மட்டுமன்றி அங்கு "காலமாற்றம்" (ஏற்ற இறக்கம்) இல்லை என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அங்கு எல்லாமே நிலையானதும், முழுமையான ஞானத்தையும் ஆனந்தத்தையும் பூரணமாகப் பெற்றவையாம். இதை 'உலகு' என நாம் குறிப்பிடும்போதே, இது உருவமும் அங்கங்களும் கொண்டது என்பது நிச்சயமாகின்றது. நமது அனுபவத்திற்கப்பாற்பட்ட உபகரணங்களால் இவ்வுலகு அமைக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை.

"அழிவுக்குட்பட்டதனால் ஸ்தூல உடலானது மாறக்கூடியதும், நிலையற்றதுமாம். ஜட உலகும் இத்தன்மையதே. ஆனால் ஜடமற்றதான சேதன சக்தி அழிவற்றதாகையால் நிலைபெற்றதாகும். ஜட, சேதன அங்கங்களின் தன்மையை நிலையற்றது, நிலையானது என இரண்டு விதமாக விஞ்ஞானிகள் பிரித்தறிகின்றனர்."

இருந்தும், ஆன்மிகத் தத்துவங்களைப்பற்றி மனங்கொண்டு ஊகிப்பவை சிலர் வேறு சிலவிதமாகக் கூறுவதுண்டு. தீவிர உலகாயதவாதிகளான ஒரு பிரிவினர் ஆன்மிகத் தத்துவத்தின் இருப்பை மறுக்கவோ, அல்லது மரணத்தின்போது பௌதிக மூலங்களின் அமைப்பு சிதைவதை மட்டும் ஒத்துக்கொள்ளவோ செய்கின்றனர். மற்றோரு பிரிவினர் 24 விதமான பௌதிக மூலங்களுக்கு நேர் எதிராக ஆன்மிகத் தத்துவத்தை ஏற்றுக்கொள்கின்றனர். இப்பிரிவினர் 'சாங்கியர்' என அழைக்கப்படுபவர். ஜடத்தத்துவங்களைப் பிரித்து நுண்மையாக ஆராய்கின்றனர். தமது ஆராய்ச்சியுன் இறுதியில், இயக்கமற்ற ஒரு உன்னத தத்துவம் இருப்பதாக மட்டுமே ஒத்துக்கொள்கின்றனர்.

ஆனால் பௌதிக உலகின் நிலையிலிருந்து, ஆன்மிக உலகை மதிப்பிட ஒருவராலும் இயலாது. ஆனால் இறைவனை அறிந்து கொள்ள உயிர்ச்சக்திகளை ஆராய்வதன் மூலம் ஒர் அனுமானத்திற்கு வர இயலும்.

"அர்ச்சுனா! நானே உன்னத்தின் உயர்ந்த தத்துவம். எனக்கு மேற்பட்டு சிறந்தது ஒன்றுமில்லை. நூலில் கட்டிய மணிகள் போன்று, எல்லாமே என்னைச் சார்ந்து இருக்கின்றன"- என கீதையில் கண்ணபகவான் குறிப்பிடுகிறார்.

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4

ஜடத்திற்கு சிருஷ்டிக்கும் சக்திகிடையாது. ஜீவ சக்தியால் இயக்கப்படுவதால்தான் ஜடப்பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன. பண்படாத நிலையில் ஜடமானது, உன்னத உயிரின் மறைச்சக்தியேயாகும். ஒரு சக்தியைப்பற்றி ஆராய்கையில் அந்தச் சக்தியின் மூலத்தை அறியவேண்டுவது இயற்கையே. உதாரணமாக, மின்சாரத்தைப்பற்றி நாம் எண்ணும்போதே மின்சார உற்பத்தி செய்யும் மின்நிலையம் நம் நினைவிற்கு வருகிறது. சக்தி மட்டும் தனியாக இயங்குதல் இயலாது. ஒரு உயர்ந்த உயிரின் கட்டுப்பாடுக்கடங்கியதே சக்தி. உதாரணமாக நெருப்பை எடுத்துக்கொண்டால் அது 'ஒளி, வெப்பம்' என்று சக்திகளை உடையதாகும். நெருப்பிலிருந்து தனியாக ஒளியும், வெப்பமும் சுயமாக இயங்கக்கூடியவை அல்ல. அதுபோலவே உன்னத, தாழ்ந்த சக்திகள் ஒரு உற்பத்தி தானமாக எல்லாமறிந்த பரம புருஷனாகத்தான் வழியுண்டு.
வேதங்களில் பரம சத்தியம் அல்லது உன்னதமான உயிர்சக்தியானது, "பகவான்" என்றழைக்கப்படுகின்றது. எல்லாச் சக்திகளின் ஊற்றுமூலமான சிறந்த உயிர் என்பது இதன் பொருள்.
நவீன விஞ்ஞானிகள் கட்டுப்பட்ட இரு சக்திகளைக் கண்டுபிடித்திருப்பது விஞ்ஞான முன்னேற்றத்தில் முதல்படி என்றே கொள்ளவேண்டும். ஜட அணு, எதிர் அணு என்று அவர்கள் இதனை அழைக்கிறார்கள்.

சேதனம்
சேதனவஸ்து எவ்வாறு விளக்கப்படலாம்?
ஜடப்பொருட்கள், ஜட அணுக்களைப்பற்றி நமக்கு அனுபவமிருக்கிறது. ஆனால் சேதன அங்கங்களைப்பற்றி மிகுந்த அனுபவமில்லை...
"சேதன அங்கமானது, ஜட உடலின் உள்ளேயே அமைந்துள்ளது. இதன் காரணத்தினாலேயே, ஸ்தூல உடலானது இளநிலையிலிருந்து, யுவநிலைக்கும், யுவநிலையிலிருந்து முதுநிலைக்கும், பிறகு சேதனம் முதிய உடலைவிட்டு போகும்போது ஜடம் செயலற்றதாகவும் ஆகின்றது. சேதனமானது வேறு தகுந்த ஸ்தூல உடலை அடைகிறது" என கீதை சேதனத்தின் தன்மையை பற்றி விவரிக்கிறது.


-----
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1
-----

24 தத்துவங்கள்

பிரகிருதியிலிருந்து அஹம்காரம், அதிலிருந்து மகத் என்கிற புத்தி, பிறகு மனம் உண்டாகின்றன. மனத்திலிருந்து ஐந்து தன்மாத்திரைகள் என்ற சூக்ஷ்ம பூதங்கள், ஐந்து ஸ்தூல பூதங்கள், அவைகளினால் ஐம்புலன்களும் இவற்றின் வெளித் தொடர்புக்கென ஐம்பொறிகளும் பிறக்கின்றன.
சம்சாரம் அல்லது சம்பந்தப்பட்ட வாழ்க்கை இப்படிப் பிரிந்த பிரகிருதியால் புருஷனுக்கு சுக துக்க வாழ்க்கையாக உலகில் வாய்க்கிறது.

இதைத் தொலைக்கும் வழி
1. உலகில் துன்பம் உள்ளது
2. துன்பத்திற்கான காரணம் உள்ளது.
3. இந்தத் துன்பத்தை போக்க முடியும்.
4. அதற்கான வழி இருக்கின்றது.
ஆரம்பத்திலிருந்து, சம்சாரம் எப்படி ஏற்பட்டதோ அதே வழியில் திரும்பிச் சென்று தன்னறிவு பெறுவது தான் அது. ஏறக்குறைய எல்லா மதங்களுமே, உண்மையையோ, கடவுளையோ தேடித் திரும்பிச் செல்வது தான்.
அதன்படி, பொறிகளை, புலன்களை, இயம நியமங்களால் அடக்கி, ஆசன, பிராணாயாமத்தால் உடலை நேர் செய்து, மனத்தை பிரத்யாஹாரத்தால் விஷயங்களிலிருந்து மீட்டு, ஒன்றில் குவித்து, அதையே தியானமாக்கி, சமாதியடைந்து, பிரகிருதியில் பிரதிபலிக்கும் புருஷனைத் தனியாக அறிந்து, விருத்திகளைப் பூரணமாக ஒடுக்கி, ஐந்தாவது மன நிலையான நிருத்தத்தை அடைந்து, ராக த்வேஷம் முதலிய வாசனைகளை ஒழித்து, வழியில் கிட்டும் அற்புத ஆற்றல்களையும் மதியாமல் பேரமைதியைப் பெற வேண்டும். இதை சாதிக்க, தத்வக்யானம் என்ற விவேகக்யாதிக்காக, அப்யாசம், வைராக்கியம் என்ற இரண்டு சிறகுகளால் பறக்க வேண்டும். இதற்கு அடிப்படை புருஷனின் சொந்த முயற்சி, செய்யும்போது, ஈஸ்வரனைப் பணிந்து யோகம் பழக வேண்டும். இது உபாயம் அல்லது சாதனமாகும்.

பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-3

இந்த விஞ்ஞான்னிகளின் கண்டுபிடிப்பானது பௌதிகப் பொருள்காளுக்கெதிரான எதிரணுக்களைக் கண்டறிந்த போதும், வேறுவிதமான ஒரு ஜடசக்தியைக் காணும்வரை சென்று நின்றுவிடுகிறதே ஒழிய, ஜடமல்லாத, பௌதிகத் தத்துவமேயல்லாதவற்றைக் காணவில்லை. ஜடப்பொருளானது இயல்பாகவே, அழியக்கூடிய தன்மையை கொண்டதாகும். ஜடத்தன்மையின் லட்சணங்க்கள் சிறிதுமற்ற பொருள், அழியும் தன்மையுமற்றதாக, இயற்கையிலேயே அமையவேண்டுமல்லவா?
ஜடமானது அழியக்கூடியதும், பிரிவுபடக்கூடியதுமாக இருக்க வேண்டும். நம்பகமான சாத்திரங்களின் பார்வையில் இந்த 'சேதன' தத்துவங்களைக் காண்போம்:-
இவ்வுலகின் மிகவும் அங்கீகாரமான நூற்கள் வேதங்களாகும். வேதங்கள் 4 பிரிவுகளை உடையன. ரிக், யஜுர், சாம, அதர்வ என்பன அப்பிரிவுகள். சாதாரண அறிவுகொண்டவர் புத்திக்கெட்டாத விஷயங்கள் இவ்வேதங்களில் அடங்கியுள்ளன. தெளிவாக விளக்கும் பொருட்டு வேதங்கள், மகாபாரதம் போன்ற காவியத்திலும், பதினெண் புராணங்களிலும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. இராமாயணமும் வேதங்களின் கருத்தை விளக்கும் ஒரு காவியமே. நான்கு வேதங்கள், வால்மீகியின் மூலராமாயணம், மகாபாரதம், புராணங்கள்- இவை வேதபுத்தகங்களாகும். உபநிஷதங்களும் வேத நூல்களின் பகுதியாகக் கருதப்படுகின்றன. வேதாந்த (சூத்திரங்கள்) வேதங்களின் சாரமாகும். இந்த வேத நூற்களையெல்லாம் சுருக்கித் தந்தாற்போன்ற பகவத் கீதை, உபநிஷதங்களின் கருத்துரையும், வேதாந்த சூத்திரங்களின் சுருக்கமான பொருளுரையும் போன்றது. வேதங்களின் முடிவான தத்துவங்களை அறிந்து கொள்ள விரும்பும் ஒருவர் கீதையைப் புரிந்து கொள்வது அவசியம். ஆன்மிக உலகிலிருந்து இறங்கிவந்து, பௌதிககத்திற்கப்பாற்பட்ட, தன் உன்னதமான சக்தியைப்பற்றி முழுவிவரம் கொடுப்பத்ற்காக பகவான் ஸ்ரீகிருஷ்ணரால் உபதேசம் செய்யப்பட்டதால் கீதை வேத நூற்களெல்லாவற்றின் மணிமுடியாகத் திகழ்கின்றது.
பரம புருஷனின் உன்னதமான சக்தியை 'பராப்ரக்ருதி' என்று கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. அழிவுக்குட்பட்ட ஜடப்பொருள்களில் இருவகை உண்டென்றுதான் இன்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் கீதையோ, ஜடம், சேதனம் என்பவற்றை இருவகைச் சக்திகளாகப் பிரித்து விவரிக்கின்றது. பொருளென்பது ஜடநிலையில் பௌதிக உலகை உருவமைக்கின்றது, தனது உன்னத நிலையில் சேதன உலகை உருவாக்குகின்றது.
உயிர்கள் உயர்சக்தியைச் சேர்ந்தவை. கீழ்ச்சக்தியான பௌதிக சக்தி, 'அபராசக்தி' என்றழைக்கப்படுகின்றது. பகவத்கீதை இவ்விதமாக 'பரா', அபரா' என்று சிருஷ்டி சக்தியை இருவிதமாக விளக்குகிறது.
-----
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-4
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2
பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1
-----

யோக நிலைகள்

யோக நிலையை அடைய, சமாதி நிலையை அடைய, 8 அங்கங்களான,
இயம,
நியம,
ஆசன,
பிராணாயாம,
பிரத்தியாகார,
தாரண,
தியான,
சமாதி
எனப்படும் 8 படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும். நன்றாக செப்பனிடப்பட்ட ராஜ பாட்டை போல நிச்சயமான வெற்றியைத் தர வழிகளை உடையதாக இருப்பதால் 'ராஜயோகம்' என்றும் இதற்குப் பெயருண்டு.
இதை பஹிர்முகம், அந்தர்முகம் என இரண்டாகப் பிரித்து சொல்லுவர். பஹிர்முகமாவது வெளி நோக்கிய உடலாலியற்றப்படும் ஆசனம், பிராணாயாமம், இயமம், நியமம் முதலியன. சிலர் இதில் பிரத்யாஹாரத்தையும் சேர்ப்பர்.
அந்தர்முகமாவது, பிரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதியாகும்; இவை மனத்தால் இயற்றப்படுபவையாகும்.
பஹிர்முகமான யோகப் படிகளை மட்டும் ஹடயோகம், கிரியாயோகம் என்றும் சொல்லுவதுண்டு.
கிரியா யோகாவில், முத்திரைகள், பந்தங்களுடன் குண்டலினிச் சக்தியைக் கிளப்பி 'வர்ண மாலாக்கள்' எனப்படும் அட்சர ஜபத்தால் செய்யப்படுவதை 'குண்டலினி யோகம்' என்பார்கள்.
தந்திர யோகம் எனப்படுவதிலும் முக்கியமாக ஆசனம், பிராணாயமம், யோக ஆதாரங்கள் முதலியவைகளை பிற சடங்குகளுடன் வைத்துக் கொண்டுள்ளனர்.
கரும யோகமானாலும், பக்தி யோகமானாலும், ஞான யோகமானாலும், ராஜ யோகம் எனப்படும் இந்த அஷ்டாங்க யோகத்தில் கூறப்பட்டுள்ளவை வேறு வேறு விதமாய் உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதால் இதன் சிறப்பு விளங்கும்.
மேலும் சாங்கிய மதத்தில் இறுதி நிலையை அடைய கூறப்பட்ட வழிகளும் யோக வழியும் ஒன்றே! ஆனால், 'தத்துவம்' என்று நோக்கும் போது சாங்கியத்தையே யோகம் எதிர்பார்த்து நிற்கிறது. வேதாந்த மதங்களும் கூடத்தான்.
சுருக்கமாக கூறவேண்டுமானால், சாங்கியமும், யோகமும் ஒன்றே; யோகத்தில் "புருஷ விசேஷஹா" என்று ஈஸ்வரன் கூறப்படாமலிருந்தால்!

யோகம் - என்றால் என்ன?

'யோகம்' என்பது 'யுஜ்' என்பதிலிருந்து 'யோக்' ஆகி வந்திருக்கிறது. அதாவது இணைத்தல் என்ற பொருளில். சிதறும் மனச் சக்தியைக் கூட்டுதல், ஆதியில் இருந்த நிலையில் தன்னைச் சேர்த்தல், யாதுமான சக்தியினிடம் சரணாகதியடைந்து அதனுடன் தன்னைச் சேர்த்தல், விசேஷ புருஷன் அல்லது இறைவனுடன் தன்னை இணைத்தல், - இதுவே யோகம்.
இந்த யோக நிலையை அடையுமுன், உலக வாழ்க்கையில் மேலாக எனப்படும் பொருள், புகழ், திறமை, பலம், சுகம் அடைவதற்கான 'சித்தி'களும் ஏற்படுவதால், உலகில், நல்ல அதிர்ஷ்டக்காரர்களை 'யோகக்காரர்கள்' என்றும், நினைத்தது கைகூடும் வேளையில், 'அவனுக்கு யோகமடிக்கிறது' என்றும் கூறுவது வழக்காயிற்று.
இந்த சாத்திரத்தில், முதல்படியாக ஒழுக்கமும் ஆச்சார அனுஷ்டானங்களும் விதிக்கப்பட்டிருப்பதால் நல்லவனை, உலகில் 'யோக்கியன்' என்று கூறுவது மரபாயிற்று.

மதங்கள் அவசியமா?

'மதங்களே வேண்டாம்' என்பதும் ' எல்லா மதங்களையும் ஒரே மதமாக்குவோம்' என்பதும் வேண்டாத வேலை. முடியாததும், குழப்பத்தை விளைவிப்பதும் ஆகும்.

'ஏன் பிறக்கிறோம்?
ஏன் சாகிறோம்?
எது நமது ஆரம்பம்?
எங்கே நமது முடிவு?
நம்மைச் சுற்றி இருப்பது என்ன? நமக்கும் நாமிருக்கும் இடத்திற்கும் என்ன தொடர்பு?
நோய், துன்பம், மரணம் இவைகளிலிருந்து நம்மால் மீளவே முடியாதா?' என்ற சிந்தனையிலிருந்து பிறந்தது தான் 'மதம்'. அந்த சிந்தனையின் தீர்மானமாக முடிந்ததுதான் கடவுள்.
சிறுதுளியான ஜீவன், எல்லாமான கடவுளை நோக்கி பயணம் செய்ய சரியாகப் போடப்பட்ட பாதையே மதம். சில பாதைகள் கடவுளிடம் முடியும், சில தொலைவிலேயே முடிந்து விடலாம். ஒரு பாதையிலே நடந்தவன் உண்மை நாட்டம் உடையவனானால் பக்குவப்பட பட சரியான பாதையை பிடித்து வந்து சேர்ந்து விடுவான்.
ஒரே ஊருக்குச் செல்ல வேண்டியவர்கள் அவரவர் இருக்கும் இடத்திலிருந்துதான் புறப்பட முடியும்.
ஆனால் இந்த 'யோக வழி'க்குள்ள சிறப்பு என்னவென்றால், இது எல்லா மதங்களும் கடைபிடிக்கக் கூடியது. யாவருக்கும் பொதுவானது.
யோகம் பழக யாரும் மதம் மாறத்தேவையில்லை.
எல்லா மதத்திலும் இருக்கும் சிறப்பான முறைகள் இதில் இருக்கின்றன. பொதுவாக, 'யோக'த்தை 'மதம்' எனச் சொல்லத் தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் யோகம் எந்த மதத்தினையும் சார்ந்ததோ அல்லது மதத்தின் கூறோ அல்ல.

ஷட் தரிசனங்கள்

ஆறு தரிசனங்கள் எனப்படும் அவையாவன:

நியாயம்,
வைசேஷிகம்,
சாங்க்யம்,
யோகம்,
பூர்வ மீமாம்சை,
உத்ரமீமாம்சை

என்பவை இந்தியாவில், பரத கண்டத்தில் வரிசைப்படி நிகழ்ந்த தத்துவ வளர்ச்சியைக் காட்டுவதாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுக்கொன்று ஒற்றுமையும் வேற்றுமையும் கொண்டுள்ளன.

சுவையான சம்பவங்கள்

ஒரு சமயம் பதஞ்சலி முனிவர் தமது ஆயிரம் மாணவர்களுக்கு 'வித்தை' சொல்லிக்கொண்டிருந்தார். மாணவர் ஆயிரம் பேர் என்பதால், தமது ஆயிரம் தலை அனந்தவடிவத்தோடு பாடம் சொன்னார். மூச்சுக் காற்றாலும், பார்வையாலும் மாணவர் மாண்டுவிடக்கூடாது என, நடுவில் ஓர் திரை இட்டுக்கொண்டார். யாரும் தம்மைத் திரையை விலக்கிப் பார்க்கக் கூடாது என்பதும், பாட நடுவில் சொல்லாமல் வெளியே செல்லக்கூடாது என்பதும், அவர் இட்ட நிபந்தனைகள். மந்தமான ஒரு மாணவர், பாடம் சலிப்பாக இருக்கவே எழுந்து யாருமறியாமல் வெளிச்சென்று விட்டார். ஆச்சரியமான முறையில் போதிக்கும் குருவைப் பார்க்கும் ஆவலில் ஒருவர் திரையை விலக்கினார்.
பதஞ்சலியின் பார்வை, மூச்சால் அங்கிருந்த அனைவரும் மாண்டு விட்டனர். அச்சமயம், வெளிச்சென்றிருந்தவர் உள்ளே வரவே, வித்தையைக் காக்க ஒருவராவது எஞ்சியிருக்கிறாரே என்று அவரிடம் தமது வித்தையை கொடுத்தபின், சொல்லாமல் வெளிச்சென்ற குற்றத்திற்காக அவரை பிரம்ம ராட்சஸாக சபித்தார்.
ஸ்ரீ இராமனுஜரின் வாழ்க்கையிலும் இதுபோலவே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரும் ஆதிசேஷனின் அவதாரம் என்பதால்,
'திருமிடறு புழுத்தான்' என்று வரலாற்றில் அவப்பெயர் பெற்ற குலோத்துங்க சோழ மன்னன் ஆட்சியில் மேனாடு (மேல் நாடு) என்று வழங்கப் பெற்ற மைசூருக்கு வந்திருந்த இராமானுஜர், மன்னனின் மகளுக்குளிருந்த பேயை விரட்டினார். ஆகவே மகிழ்ந்த மன்னன் இராமனுஜரைப் பின்பற்ற முடிவு கொண்டான்.
அதுவரை அம்மன்னன் பின்பற்றி வந்த சமணர்கள் பன்னீராயிரவர் (12000 பேர்) சினமுற்று ஒரே சமயத்தில் இராமானுஜருடன் வாதத்திற்கு வந்தனர். அப்போது தம் முன்னால் ஒரு திரையை இட்டுக்கொண்டு அனைவருடனும் இராமானுஜர் ஏக காலத்தில் ஆதிசேஷனான தம் உருவத்தில் வாதிட்டு வென்றார்.