பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-1

(இது நான் படித்த புத்தகம் ஒன்றின் துணையுடன் எழுதப்படுகிறது. இது நான் தெரிந்து கொண்ட சுவாரசியமான செய்தியை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியேயன்றி வேரெதுவுமில்லை, மேலும் இதன் உண்மைத்தன்மைக்கும் நான் பொறுப்பில்லை. நன்றி -கவிப்ரியன்)

ஒவ்வோருயிரும் (முக்கியமாக பண்பட்ட மனிதப் பிறவியில்) என்றென்றும் நலமாக வாழும் ஆசையைக் கொண்டுள்ளது. இந்த எண்ணம் இயற்கையானதே. ஏனெனில் தமது உண்மை நிலையில் உயிர்களெல்லாம் அழிவற்ற, ஆனந்தமயமானவையே. எனினும் வாழ்வின் கட்டுப்பட்ட நிலையில், மீண்டும் மீண்டும் பிறந்திறக்கும் போராட்டத்தில் பலகாலமாக இவ்வுயிர்கள் ஈடுபட்டுள்ளன. இதனால்தான் நிலையான இன்பமோ, அழிவற்ற நிலையோ அடையாமல் இவை உலவுகின்றன.
தற்காலத்தில், பிற உலகங்களுக்கு யாத்திரை செய்யும் இச்சை மனித சமுதாயத்தில் தீவிரமாக வளர்ந்து வருகிறது. இதுவும் இயற்கையான விருப்பமே. இதுபோன்ற பிரயானங்கள் மனங்கவர்பவையும் மயக்குபவையும் ஆகும். விதவிதமான உயிரனங்கள் நிறைந்த எண்ணற்றவையும் பலதரப்பட்டவையுமான இந்த கோளங்களுக்குச் சென்றுவருவது கிளர்ச்சியூட்டும் அனுபவமே.
இதுபோன்ற பயணம் செல்லும் எண்ணம், 'யோகப் பயிற்சியின்' மூலம் சாத்தியமாகும். விரும்பிய இடத்திற்குச் சென்று சேரும் வழி யோகப்பயிற்சியே ஆகும்.
தனது சுயமுயற்சியின் மூலம் ஒருவன் இந்த பக்குவ நிலையை அடைதல் சாத்தியமே. பக்தியோகத்தின் விதிமுறையைத் தானிருக்கும் இடத்திலேயே பின்பற்ற முடியும். தக்க வழிகாட்டியின் கீழே அனுசரிப்பதனால் இவ்வழி சரளமானதும், மகிழ்ச்சியூட்டுவதுமாகும்.


பிற கிரகங்களுக்கு எளிதான பயணம்-2

No comments: