how to make a spinner
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு குண்டலினி தியானம், மனித ஆற்றல், யோக மார்க்கம்
True Demonstration of Psychic Power
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு குண்டலினி தியானம், யோக மார்க்கம்
Third Eye Vision
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு குண்டலினி தியானம், யோக மார்க்கம்
How to meditate (part 2)
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு குண்டலினி தியானம், யோக மார்க்கம்
How to meditate (part 1)
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு குண்டலினி தியானம், யோக மார்க்கம்
How to meditate
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு குண்டலினி தியானம், யோக மார்க்கம்
ஹரிவராசனம்-பாடல் வரிகள்
ஹரிவராசனம் விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணகீர்த்தனம் பக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
த்ருபவனார்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரினயனாம்ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ருதஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
பவபயாப்பகம் ப்ஹாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷனம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
கலம்ருதுஸ்மிதம் சுந்தராணனம்
கலபகோமளம் காத்ரமோஹனம்
கலபகேஷரி வஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
ஸ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருத்திவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
பஞ்சாத்ரீஷ்வரி மங்களம்..
ஹரிஹரப்ரேமாக்ருதே மங்களம்..
பிஞ்சாலங்க்ருத மங்களம்..
ப்ரணமதாம் சிந்தாமணி மங்களம்..
பஞ்சாஸ்யத்வஜ மங்களம்..
த்ருஜகதாவாத்யப்ரபோ மங்களம்..
பஞ்சாஸ்த்ரோபம மங்களம்..
ஸ்ருதிஸிரோலங்கார சன்மங்களம்....ஓம்..ஓம்...ஓம்.
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு ஆன்மிக பாடல்கள்
Brahma-Sutras
The author of the Brahma-Sutras is Badarayan whom Indian tradition identifies with Vyasa. In the Brahma-Sutras, Badarayana- Vyasa strings together the leading concepts of Vedanta in an orderly manner. The Sutra is an exquisite garland made out of the Upanishadic blossoms. It is divided into four chapters known as Adhyayas. Each chapter consists of four parts called Padas. Each part has a number of sections called Adhikaranas and each section has one or more aphorisms or Sutras. According to Sri Sankaracharya, the number of sections is 192. The total number of aphorisms (Sutras) is 555.பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு ஆன்மிக செய்திகள், யோக மார்க்கம்
சிற்றின்பத்தினின்று விடுதலை
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு கர்ம யோகம், படங்கள், வாழ்வியல்
BAJA GOVIDAM
பதிந்தது Kaviprian-Manick 1 comments தொடுத்துக்கொள்க
பிரிவு Sathsang, ஆன்மிக செய்திகள், சத்சங்கம், பக்தி மார்க்கம்
குமாரஸ்தவம்
ஓம் ஷண்முக பதயே நமோ நம:
ஓம் ஷண்மத பதயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம:
ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம:
ஓம் ஷட்கோண பதயே நமோ நம:
ஓம் ஷட்கோச பதயே நமோ நம:
ஓம் நவநிதி பதயே நமோ நம:
ஓம் சுபநிதி பதயே நமோ நம:
ஓம் நரபதி பதயே நமோ நம:
ஓம் ஸுரபதி பதயே நமோ நம:
ஓம் நடச்சிவ பதயே நமோ நம:
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம:
ஓம் கவிராஜ பதயே நமோ நம:
ஓம் தபராஜ பதயே நமோ நம:
ஓம் இஹபர பதயே நமோ நம:
ஓம் புகழ்முநி பதயே நமோ நம:
ஓம் ஜயஜய பதயே நமோ நம:
ஓம் நயநய பதயே நமோ நம:
ஓம் மஞ்சுள பதயே நமோ நம:
ஓம் குஞ்சரீ பதயே நமோ நம:
ஓம் வல்லீ பதயே நமோ நம:
ஓம் மல்ல பதயே நமோ நம:
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:
ஓம் சஸ்த்ர பதயே நமோ நம:
ஓம் ஷஷ்டி பதயே நமோ நம:
ஓம் இஷ்டி பதயே நமோ நம:
ஓம் அபேத பதயே நமோ நம:
ஓம் ஸுபோத பதயே நமோ நம:
ஓம் வ்யூஹ பதயே நமோ நம:
ஓம் மயூர பதயே நமோ நம:
ஓம் பூத பதயே நமோ நம:
ஓம் வேத பதயே நமோ நம:
ஓம் புராண பதயே நமோ நம:
ஓம் ப்ராண பதயே நமோ நம:
ஓம் பக்த பதயே நமோ நம:
ஓம் முக்த பதயே நமோ நம:
ஓம் அகார பதயே நமோ நம:
ஓம் உகார பதயே நமோ நம:
ஓம் மகார பதயே நமோ நம:
ஓம் விகாச பதயே நமோ நம:
ஓம் ஆதி பதயே நமோ நம:
ஓம் பூதி பதயே நமோ நம:
ஓம் அமார பதயே நமோ நம:
ஓம் குமார பதயே நமோ நம:
---குமாரஸ்தவம் முற்றிற்று---
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு குமாரஸ்தவம்
Please Vote For Isha Foundation Charity..
Please Vote For Isha Foundation Charity..
Hi,
I need your help! Just spare few minutes of your time by reading the below mail.
Chase Community Giving has given Facebook users the chance to decide which charities/NGOs will receive grants of up to US$ 1 million. Isha Foundation is one of the few NGOs with India-based projects to make it to the final round.
Isha Foundation is a non-religious, not-for-profit, public service organization, which addresses all aspects of human wellbeing. From its powerful yoga programs for inner transformation to its inspiring projects for society and environment, Isha activities are designed to create an inclusive culture that is the basis for global harmony and progress. This approach has gained worldwide recognition and reflects in Isha Foundation's special consultative status with the Economic and Social Council (ECOSOC) of the United nations. Read More
JUST a FEW MINUTES of your time can help ISHA FOUNDATION win up to US$ 1 MILLION for THOSE WHO NEED IT MOST. For this,
I Need Your Vote!
( You can vote upto 11.59 today..Now ISHA is in 2nd position )
It's very simple. All you need to do is,
1) Go to http://www.facebook.com/ and create a face book account. Confirm the account and login to facebook.
2) Go to "Chase community Giving" home page and become a fan (by clicking "Become a Fan" button located at top page)
3) Go to Isha's chase face book home page and click "Allow"
4) Click "Vote for Charity" to vote for Isha.
Click here to see the step by step procedure of voting with screen shots.
Finally, Kindly forward the information to your friends and relatives and help Isha to get more Votes.
THANKS A LOT FOR YOUR KINDNESS.
Regards,
Manick
-- Save Trees.
Let the World Breath.
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு உதவி
குண்டலினி தியானம்
ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ண ஸுமனி ப்ரேதே விதாநப்ரபே பிரஹ்மாதி ப்ரதிமாதி கீலித ஷடாதாரப்ஜ கக்ஷோத்ததே! பிரஹ்மாண்டாப்ஜ மஹாஸ்னே ஜனனிதே மூர்த்திம் பஜே சின்மயீம் ஸுஷும்னாயத பீதயகஜ மஹக மத்ய திரிகோண..
"அ" முதல் "க்ஷ" வரை எழுத்துகளாகும்.. முத்துக்கள் அமைந்த விதானத்தின் கீழ் பிரும்மா முதலியவரிகள் விளங்கும் ஆறு ஆதார வரிசைகளுக்கு மேல் பிரம்மாந்திர தாமரை ஆசனத்தில் முக்கோணத்தில் விளங்கும் ஞானமயமான உன் வடிவத்தினை தரிசிக்கிறேன். - ஸ்ரீ சக்தி மஹிம்ன ஸ்தோத்திரம்.
மூலாதாரத்திற்கு கீழே உள்ள குல சகஸ்ரார மத்யம் மஞ்சள் நிறம்; அங்குள்ள முக்கோணம் அ - க - த - ஆஸனம். இங்குள்ள குண்டலினி சக்தியைக் கிளப்பி சிரஸின் உச்சியிலுள்ள அகுல சகஸ்ராரத்திற்கு அழைத்து வந்து தியானம் செய்வது சிவயோகம். மூலாதாரத்திற்கு கீழுள்ள சூல ஸகஸ்ராரம் சிவப்புத் தாமரையாகக் கூறப்படுவதுண்டு. குண்டலினி உறங்கும்போது இது மஞ்சள் நிறம். விழிப்படையும் போது இதுவே சிவப்பு நிறமாக மாறுகிறது.
குண்டலினியைத் தியானத்திது வந்தால் அறிவு, உயிர் பேரியக்க மண்டலம் ஆகிய இம்மூன்றுக்கும் பிறப்பிடம் உணர்ந்து அறிவை நிறை நிலையில் ஒன்றிப் பழகி வந்தால் தனக்குள்ளாகவே இவ்வுலகம் முழுவதும் அடங்கி காணும் நிலை ஏற்படும். இதுவே தான் தன்னை அறிவது (தத்வமஸி).
"சொன்ன நன் முதலாஞ் சுழுமுனையின் மேரு பற்றி
வன்னியை எழுப்பிக் காலால் மனம் வைத்து ஓராண்டு நோக்கில்
பொன்னின் வடிவதாகும் புகழ்ந்திடும் அணுவும் ஆகும்
அன்னத்தின் தெய்யாநாகம் அஷ்டமாசித்தியாகும்."
குண்டலினி சக்தியை உச்சந்தலையில் வைத்து தியானித்து வந்தால் மூளைக் கபாலங்கள் செயல்பட்ட ஆரம்பிக்கும் வாழ்நாளில் எந்த எந்தப் புலன்கள் மூலம் செயலாற்று அனுபவம் பெற்றிருக்கிறோமோ அந்த அனுபவப் பதிவுகள் விகிதாசார வலுவோடு அமைந்து மனத்தின் தன்மையாக விளங்கும் திறன் உடையன. அறியாமல் செய்த விளைவுகளும். இந்த பழைய பதிவுகளை மாற்றி புதுப்பிக்கும் ஆற்றல் இதற்குண்டு.
மிக நுண்ணியக்க நிலையில் அறிவு, சிரசில் நிற்கப் பழகுவதால் விஞ்ஞான மய கோச நிலையை இயல்பாகவே பெறுகிறது.
சிரசிற்கு மேல் 12 அங்குலம் மேலுள்ள துவாதசாந்த பெரு வெளியில் குண்டலினி சக்தியை ஹ்ருதயம், தொண்டைக்குழி, நெற்றி, உச்சந்தலை, சகஸ்ராரப் பெருவெளி, இவ்விடங்களில் நிறுத்துவது தாரணை எனப்படும்.
ஆக்ஞையில் குண்டலினி சக்தியை வைத்து நினைத்து வந்தால் உயிராற்றல் மீறிச் செலவாகா. அவ்வாற்றல் வேண்டும் அளவுக்கு சேகரிக்கப்படும். இதனால் உடம்புக்கு எந்தவித நோய்களும் வராது. நினைவாற்றல் பெருகும்.
இந்த புருவ மத்தியே ஞானசபை சிற்றம்பலம்.
"நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி
உற்றுப் பார்க்க வொளியிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரமன் இருப்பிடம்
சிற்றம்பலம் என்று சேர்த்துக் கொண்டேனே."
- திருமூலர்.
பதிந்தது Kaviprian-Manick 0 comments தொடுத்துக்கொள்க
பிரிவு குண்டலினி தியானம்
கரன்ஸி நோட்டின் அதிசயப் பிள்ளையார்
ஜாவாவின் மன்னர்கள் மிகவும் புராதனமான க்ஷத்திர மரபைச் சேர்ந்தவர்கள். சைவ சமயம், பௌத்த சமயம் ஆகியவை இரண்டும் செல்வாக்குடன் இருந்தன. சைவ சமயம் என்பது நாம் இன்று வைத்திருக்கும் சொங்கி சைவம் இல்லை. ஆகமம், தாந்திரீகம் ஆகியவை கலந்த சைவம். அது ஒரு ஒருமாதிரியான துவைத சைவம். சிவனே சர்வேஸ்வரன்; பரமேஸ்வரன். அவனே அருளாளன். அவனே படைத்தல், காத்தல் முதலியவற்¨றைச் செய்பவன். ருத்ரனாக இருந்து அழிப்பவனும் அவனே. ஒரு வித்தியாசம். ருத்ரனாக இருந்து காப்பவனும் அவனே. இந்த சைவத்தில் வைஷ்ணவமும் இணைந்திருந்தது. ராமனுடைய கதையாகிய ராமாயணமும் அவர்களிடம் இருந்தது. கிருஷ்ணனுடைய அவதார மகிமைகளைக் கூறும் கிருஷ்ணாயணமும் இருந்தது. 'க்ரிஸ்ணாயாணா' என்ற பெயரில் அந்த இதிகாசம் விளங்கியது. சக்தி வழிபாட்டின் பல கூறுகள் அங்கு விளங்கின. கொடி கட்டிப் பறந்தது சண்டி வழிபாடு என்றழைக்கப்பட்ட துர்க்கை வழிபாடு. ஒரே இடத்தில் ஆயிரம் கோயில்களைக் கொண்ட இடம் ஜாவா. ப்ராம்பானான் என்று அழைக்கப்படும் கோயில்கூட்டம் அங்கு உள்ளது. அதை லோரோ ஜோங்க்ராங் என்னும் பெயராலும் குறிப்பிடுவார்கள். ப்ராம்பானான் கோயில் கூட்டத்துடன் ஜாவாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதாவது அழிக்கப்பட்டவை போக மிச்சம் இருப்பவை. அவர்களின் பௌத்தமும் தாந்த்ராயணா பௌத்தம் என்னும் வகையைச் சேர்ந்தது. வஜ்ரபோதி என்னும் தமிழரைத் தலைமை பிக்குவாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜாவானிய மன்னர் ஒருவர் போரோபுடூர் என்னும் பிரம்மாண்டமாக மேரு விஹாரத்தை நிர்மாணித்தார். மனிதன் என்பவன் தெய்வீக ஆற்றல்கள் பெற்றவனாக விளங்கவேண்டும் என்ற கொள்கையினர். க்ஷத்திரியர்களாக விளங்கியவர்கள் அந்த மாதிரி ஆற்றல்களைப் பெரிதும் வளர்த்துக்கொண்டார்கள். அந்த மரபில் வந்த கடைசி மன்னரின் காலத்தில் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஜாவானியர் மந்திரதந்திரங்கள், ஜோதிடம் ஆகியவற்றில் வல்லவர்கள். அந்த சமயத்தில் சில சாபங்கள், ஆணைகள், சபதங்கள், தீர்க்கதரிசனங்கள் ஆகியவை பிறந்தன. அதன்பின்னர் ஆட்சி பல கைகள் மாறி டச்சுக்காரர்களிடம் சென்றது. அந்த சாபங்கள், சபதங்களை மக்கள் மிகவும் நம்பியிருந்தனர். 'ராத்து' எனப்படும் பெருவீரன் ஒருவன் பிற்காலத்தில் வரப்போவதாக நம்பப்பட்டது. அப்போது ஜாவா மீண்டும் பழைய க்ஷத்திரிய மரபினர் கைக்கே சென்றுவிடும் என்றும் நம்பினர். அந்த தீர்க்கதரிசனத்தை நடக்கவொட்டாமால் தடுக்க பலர் முயன்றும் வந்திருக்கின்றனர். ராத்துவின் வருகையால் ஜாவாவும், ஜாவாவின் தலைமைத்துவத்தில் இந்தோனீசியாவும் வல்லரசாக மாறிவிடுமோ என்று பயந்தனர். ராத்து என்னும் அந்த க்ஷத்திரிய வீரன் ஜாவாவின் முக்கிய நகரமாகிய பாண்டுங் என்னும் பிரதேசத்தில் தோன்றுவான் என்று ஏற்கனவே நம்பப்பட்டது. சொக்கார்ணோ தம்மை ஓர் அவதார புருஷனாக நினைத்திருந்தார். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதிக்கொண்டார். ஒருமுறை வெட்டவெளியில் நிர்மலமான ஆகாயத்தில் மின்னல் தோன்றச்செய்து வெள்ளைக்காரப் பத்திரிக்கையாளர்கள் சிலருக்குக் காட்டினார். அவரே அந்த ராத்துவாக இஇருக்கக்கூடும் என்றும் நினத்தார்கள்.அந்தப் பழைய தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதி சொக்கார்ணோவினால் உண்மையாகியது. அவரைத் தள்ளிவிட்டு வந்த சுஹார்த்தோ, நாளடைவில் தம்மையே பழைய பாண்டுங் மன்னர் பரம்பரை என்று நினைக்க ஆரம்பித்தார். அதற்குக் காரணமும் உண்டு. இப்போதைய யோக்ஜாக்கார்த்தா சுல்த்தானுக்கு அவர் சகோதர முறை ஆகிறார். ஏதோ ஒரு முறையில் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய மகனுக்கு பாண்டுங் ராஜகுமாரி ஒருத்தியை மணம் முடித்துவைத்தார். அந்த திருமண பெர்ஸாண்டிங்க் சடங்கின்போது, மணமகளும் மணமகனும் பண்டைய க்ஷத்திரிய மரபையட்டி ஆடையணிகள் புனைந்து மணம் செய்துகொண்டனர். இந்தோனேஷியாவின் பொருளாதார நிலைமை மோசமாகிக்கொண்டே வந்தபோது, சுஹார்த்தோவின் தரப்பினர் பழைய தீர்க்கதரிசனங்கள், சாபங்கள் போன்றவற்றையெல்லாம் கிளறிக் கிண்டிப் பார்த்தார்கள். பெரும்புலமை வாய்ந்த ஜோதிடர்கள், மாந்திரீகர்கள், தாந்திரீகர்கள் ஆகியோரையெல்லாம் வைத்து மிகவும் நுட்பமாக ஆராயச் செய்தனர். இந்தோனேஷியாவின் தற்சமய இடையூறுகள், துன்பங்களை நீக்குவதற்குச் சில பரிகாரங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்று, கணேசரை வைத்துச்செய்யவேண்டிய பரிகாரம். பொருளாதாரம் சீரடையவும், இந்தோனேஷிய ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஊறுகள் நீங்குவதற்காகவும் செய்யப்பட்ட பரிகாரங்களின் ஓர் அங்கமாக கணேசரின் உருவத்தை கரன்ஸி நோட்டில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அவர்கள் பயன்படுத்தியது, பண்டைய ப்ராம்பனான் தாந்திரீக கணேசர். இந்த மூர்த்தம் மிகவும் வீரியம் மிக்கது. அந்த ரூப்யா நோட்டை வெளியிட்டு 18 மாதங்களுக்குள்ளாக சுஹார்த்தோவின் ஆட்சிக்கு மோசம் நேரிட்டது. ஏன் அவ்வாறு நடந்தது? இந்தோனேஷியாவின் நல்வாழ்வுக்கு இடையூறுகள் இல்லாவண்ணம் அந்த ஜாவானிய தாந்திரீகர்கள் சடங்குகளைச் செய்து பரிகாரமும் கண்டனர். இந்தோனேஷிய நல்வாழ்வுக்குக் குந்தகமாக இருந்தது சுஹார்த்தோவின் ஆட்சிதான். ஆகவே அந்த ஆட்சி அகன்றது. அதை நடத்திவர் சுஹார்த்தோ என்பதாலும் அவரே இந்தோனேஷியாவின் பாழ்நிலைக்குக் காரணர் என்பதாலும் அந்த சூட்சும மர்மசக்தி அவரை அகற்றிவிட்டது. அவர்கள் நம்பியது வீண்போகவில்லை. ஆட்சியிலிருந்து சுஹார்த்தோவும் அவருடைய ஆட்களும் அகன்றனர். ஒரு கொடுங்கோன்மையான ஆட்சி நீங்கியது. இவ்வாறு அற்புதமான அதிசயமான விதத்தில் ப்ராம்பனான் கணேசர் தம்முடைய ஆற்றலை வெளிப்படுத்தி அரிய காரியத்தை சாதித்துவிட்டார்.பதிந்தது Kaviprian-Manick 2 comments தொடுத்துக்கொள்க
பிரிவு ஆன்மிக செய்திகள்












