குண்டலினி தியானம்

ஆதி க்ஷாந்த ஸமஸ்த வர்ண ஸுமனி ப்ரேதே விதாநப்ரபே பிரஹ்மாதி ப்ரதிமாதி கீலித ஷடாதாரப்ஜ கக்ஷோத்ததே! பிரஹ்மாண்டாப்ஜ மஹாஸ்னே ஜனனிதே மூர்த்திம் பஜே சின்மயீம் ஸுஷும்னாயத பீதயகஜ மஹக மத்ய திரிகோண..
"அ" முதல் "க்ஷ" வரை எழுத்துகளாகும்.. முத்துக்கள் அமைந்த விதானத்தின் கீழ் பிரும்மா முதலியவரிகள் விளங்கும் ஆறு ஆதார வரிசைகளுக்கு மேல் பிரம்மாந்திர தாமரை ஆசனத்தில் முக்கோணத்தில் விளங்கும் ஞானமயமான உன் வடிவத்தினை தரிசிக்கிறேன். - ஸ்ரீ சக்தி மஹிம்ன ஸ்தோத்திரம்.
மூலாதாரத்திற்கு கீழே உள்ள குல சகஸ்ரார மத்யம் மஞ்சள் நிறம்; அங்குள்ள முக்கோணம் அ - க - த - ஆஸனம். இங்குள்ள குண்டலினி சக்தியைக் கிளப்பி சிரஸின் உச்சியிலுள்ள அகுல சகஸ்ராரத்திற்கு அழைத்து வந்து தியானம் செய்வது சிவயோகம். மூலாதாரத்திற்கு கீழுள்ள சூல ஸகஸ்ராரம் சிவப்புத் தாமரையாகக் கூறப்படுவதுண்டு. குண்டலினி உறங்கும்போது இது மஞ்சள் நிறம். விழிப்படையும் போது இதுவே சிவப்பு நிறமாக மாறுகிறது.
குண்டலினியைத் தியானத்திது வந்தால் அறிவு, உயிர் பேரியக்க மண்டலம் ஆகிய இம்மூன்றுக்கும் பிறப்பிடம் உணர்ந்து அறிவை நிறை நிலையில் ஒன்றிப் பழகி வந்தால் தனக்குள்ளாகவே இவ்வுலகம் முழுவதும் அடங்கி காணும் நிலை ஏற்படும். இதுவே தான் தன்னை அறிவது (தத்வமஸி).
"சொன்ன நன் முதலாஞ் சுழுமுனையின் மேரு பற்றி
வன்னியை எழுப்பிக் காலால் மனம் வைத்து ஓராண்டு நோக்கில்
பொன்னின் வடிவதாகும் புகழ்ந்திடும் அணுவும் ஆகும்
அன்னத்தின் தெய்யாநாகம் அஷ்டமாசித்தியாகும்."
குண்டலினி சக்தியை உச்சந்தலையில் வைத்து தியானித்து வந்தால் மூளைக் கபாலங்கள் செயல்பட்ட ஆரம்பிக்கும் வாழ்நாளில் எந்த எந்தப் புலன்கள் மூலம் செயலாற்று அனுபவம் பெற்றிருக்கிறோமோ அந்த அனுபவப் பதிவுகள் விகிதாசார வலுவோடு அமைந்து மனத்தின் தன்மையாக விளங்கும் திறன் உடையன. அறியாமல் செய்த விளைவுகளும். இந்த பழைய பதிவுகளை மாற்றி புதுப்பிக்கும் ஆற்றல் இதற்குண்டு.
மிக நுண்ணியக்க நிலையில் அறிவு, சிரசில் நிற்கப் பழகுவதால் விஞ்ஞான மய கோச நிலையை இயல்பாகவே பெறுகிறது.
சிரசிற்கு மேல் 12 அங்குலம் மேலுள்ள துவாதசாந்த பெரு வெளியில் குண்டலினி சக்தியை ஹ்ருதயம், தொண்டைக்குழி, நெற்றி, உச்சந்தலை, சகஸ்ராரப் பெருவெளி, இவ்விடங்களில் நிறுத்துவது தாரணை எனப்படும்.
ஆக்ஞையில் குண்டலினி சக்தியை வைத்து நினைத்து வந்தால் உயிராற்றல் மீறிச் செலவாகா. அவ்வாற்றல் வேண்டும் அளவுக்கு சேகரிக்கப்படும். இதனால் உடம்புக்கு எந்தவித நோய்களும் வராது. நினைவாற்றல் பெருகும்.
இந்த புருவ மத்தியே ஞானசபை சிற்றம்பலம்.
"நெற்றிக்கு நேரே புருவத்திடைவெளி
உற்றுப் பார்க்க வொளியிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பரமன் இருப்பிடம்
சிற்றம்பலம் என்று சேர்த்துக் கொண்டேனே."
- திருமூலர்.

கரன்ஸி நோட்டின் அதிசயப் பிள்ளையார்

இது டாக்டர் எஸ்.ஜெயபாரதி அவர்கள் எழுதிய பதிவு. தற்செயலாக படிக்க நேர்ந்தது, இதோ உங்கள் பார்வைக்கும்..சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனீசியாவில் ஒரு கரன்ஸி நோட்டு வெளியிடப்பட்டது. இருபதினாயிரம் ரூப்பியா நோட்டு அது. அந்தச் சமயத்தில் அதன் மதிப்பு யூஎஸ் ஒரு டாலர் எண்பத்தைந்து காசுகள்; இந்திய மதிப்பு எண்பத்து நான்கு ரூபாய்கள். அதில் உள்ள அதிசயம் என்னவென்றால் அதில் ஒரு விநாயகர் உருவம் இருப்பதுதான். ஏனெனில் இந்தோனீசியா முஸ்லிம் பெரும்பான்மையினரைக் கொண்ட நாடு.

இதற்கு ஒரு நீண்ட பின்னணி உண்டு. ஆழமான பின்னணி. மிகவும் சூட்சுமமான பின்னணி. ஜாவாவின் மன்னர்கள் மிகவும் புராதனமான க்ஷத்திர மரபைச் சேர்ந்தவர்கள். சைவ சமயம், பௌத்த சமயம் ஆகியவை இரண்டும் செல்வாக்குடன் இருந்தன. சைவ சமயம் என்பது நாம் இன்று வைத்திருக்கும் சொங்கி சைவம் இல்லை. ஆகமம், தாந்திரீகம் ஆகியவை கலந்த சைவம். அது ஒரு ஒருமாதிரியான துவைத சைவம். சிவனே சர்வேஸ்வரன்; பரமேஸ்வரன். அவனே அருளாளன். அவனே படைத்தல், காத்தல் முதலியவற்¨றைச் செய்பவன். ருத்ரனாக இருந்து அழிப்பவனும் அவனே. ஒரு வித்தியாசம். ருத்ரனாக இருந்து காப்பவனும் அவனே. இந்த சைவத்தில் வைஷ்ணவமும் இணைந்திருந்தது. ராமனுடைய கதையாகிய ராமாயணமும் அவர்களிடம் இருந்தது. கிருஷ்ணனுடைய அவதார மகிமைகளைக் கூறும் கிருஷ்ணாயணமும் இருந்தது. 'க்ரிஸ்ணாயாணா' என்ற பெயரில் அந்த இதிகாசம் விளங்கியது. சக்தி வழிபாட்டின் பல கூறுகள் அங்கு விளங்கின. கொடி கட்டிப் பறந்தது சண்டி வழிபாடு என்றழைக்கப்பட்ட துர்க்கை வழிபாடு. ஒரே இடத்தில் ஆயிரம் கோயில்களைக் கொண்ட இடம் ஜாவா. ப்ராம்பானான் என்று அழைக்கப்படும் கோயில்கூட்டம் அங்கு உள்ளது. அதை லோரோ ஜோங்க்ராங் என்னும் பெயராலும் குறிப்பிடுவார்கள். ப்ராம்பானான் கோயில் கூட்டத்துடன் ஜாவாவில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. அதாவது அழிக்கப்பட்டவை போக மிச்சம் இருப்பவை. அவர்களின் பௌத்தமும் தாந்த்ராயணா பௌத்தம் என்னும் வகையைச் சேர்ந்தது. வஜ்ரபோதி என்னும் தமிழரைத் தலைமை பிக்குவாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஜாவானிய மன்னர் ஒருவர் போரோபுடூர் என்னும் பிரம்மாண்டமாக மேரு விஹாரத்தை நிர்மாணித்தார். மனிதன் என்பவன் தெய்வீக ஆற்றல்கள் பெற்றவனாக விளங்கவேண்டும் என்ற கொள்கையினர். க்ஷத்திரியர்களாக விளங்கியவர்கள் அந்த மாதிரி ஆற்றல்களைப் பெரிதும் வளர்த்துக்கொண்டார்கள். அந்த மரபில் வந்த கடைசி மன்னரின் காலத்தில் மிகப்பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஜாவானியர் மந்திரதந்திரங்கள், ஜோதிடம் ஆகியவற்றில் வல்லவர்கள். அந்த சமயத்தில் சில சாபங்கள், ஆணைகள், சபதங்கள், தீர்க்கதரிசனங்கள் ஆகியவை பிறந்தன. அதன்பின்னர் ஆட்சி பல கைகள் மாறி டச்சுக்காரர்களிடம் சென்றது. அந்த சாபங்கள், சபதங்களை மக்கள் மிகவும் நம்பியிருந்தனர். 'ராத்து' எனப்படும் பெருவீரன் ஒருவன் பிற்காலத்தில் வரப்போவதாக நம்பப்பட்டது. அப்போது ஜாவா மீண்டும் பழைய க்ஷத்திரிய மரபினர் கைக்கே சென்றுவிடும் என்றும் நம்பினர். அந்த தீர்க்கதரிசனத்தை நடக்கவொட்டாமால் தடுக்க பலர் முயன்றும் வந்திருக்கின்றனர். ராத்துவின் வருகையால் ஜாவாவும், ஜாவாவின் தலைமைத்துவத்தில் இந்தோனீசியாவும் வல்லரசாக மாறிவிடுமோ என்று பயந்தனர். ராத்து என்னும் அந்த க்ஷத்திரிய வீரன் ஜாவாவின் முக்கிய நகரமாகிய பாண்டுங் என்னும் பிரதேசத்தில் தோன்றுவான் என்று ஏற்கனவே நம்பப்பட்டது. சொக்கார்ணோ தம்மை ஓர் அவதார புருஷனாக நினைத்திருந்தார். விஷ்ணுவின் அவதாரமாகக் கருதிக்கொண்டார். ஒருமுறை வெட்டவெளியில் நிர்மலமான ஆகாயத்தில் மின்னல் தோன்றச்செய்து வெள்ளைக்காரப் பத்திரிக்கையாளர்கள் சிலருக்குக் காட்டினார். அவரே அந்த ராத்துவாக இஇருக்கக்கூடும் என்றும் நினத்தார்கள்.அந்தப் பழைய தீர்க்கதரிசனத்தின் ஒரு பகுதி சொக்கார்ணோவினால் உண்மையாகியது. அவரைத் தள்ளிவிட்டு வந்த சுஹார்த்தோ, நாளடைவில் தம்மையே பழைய பாண்டுங் மன்னர் பரம்பரை என்று நினைக்க ஆரம்பித்தார். அதற்குக் காரணமும் உண்டு. இப்போதைய யோக்ஜாக்கார்த்தா சுல்த்தானுக்கு அவர் சகோதர முறை ஆகிறார். ஏதோ ஒரு முறையில் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய மகனுக்கு பாண்டுங் ராஜகுமாரி ஒருத்தியை மணம் முடித்துவைத்தார். அந்த திருமண பெர்ஸாண்டிங்க் சடங்கின்போது, மணமகளும் மணமகனும் பண்டைய க்ஷத்திரிய மரபையட்டி ஆடையணிகள் புனைந்து மணம் செய்துகொண்டனர். இந்தோனேஷியாவின் பொருளாதார நிலைமை மோசமாகிக்கொண்டே வந்தபோது, சுஹார்த்தோவின் தரப்பினர் பழைய தீர்க்கதரிசனங்கள், சாபங்கள் போன்றவற்றையெல்லாம் கிளறிக் கிண்டிப் பார்த்தார்கள். பெரும்புலமை வாய்ந்த ஜோதிடர்கள், மாந்திரீகர்கள், தாந்திரீகர்கள் ஆகியோரையெல்லாம் வைத்து மிகவும் நுட்பமாக ஆராயச் செய்தனர். இந்தோனேஷியாவின் தற்சமய இடையூறுகள், துன்பங்களை நீக்குவதற்குச் சில பரிகாரங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அவற்றில் ஒன்று, கணேசரை வைத்துச்செய்யவேண்டிய பரிகாரம். பொருளாதாரம் சீரடையவும், இந்தோனேஷிய ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஊறுகள் நீங்குவதற்காகவும் செய்யப்பட்ட பரிகாரங்களின் ஓர் அங்கமாக கணேசரின் உருவத்தை கரன்ஸி நோட்டில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அவர்கள் பயன்படுத்தியது, பண்டைய ப்ராம்பனான் தாந்திரீக கணேசர். இந்த மூர்த்தம் மிகவும் வீரியம் மிக்கது. அந்த ரூப்யா நோட்டை வெளியிட்டு 18 மாதங்களுக்குள்ளாக சுஹார்த்தோவின் ஆட்சிக்கு மோசம் நேரிட்டது. ஏன் அவ்வாறு நடந்தது? இந்தோனேஷியாவின் நல்வாழ்வுக்கு இடையூறுகள் இல்லாவண்ணம் அந்த ஜாவானிய தாந்திரீகர்கள் சடங்குகளைச் செய்து பரிகாரமும் கண்டனர். இந்தோனேஷிய நல்வாழ்வுக்குக் குந்தகமாக இருந்தது சுஹார்த்தோவின் ஆட்சிதான். ஆகவே அந்த ஆட்சி அகன்றது. அதை நடத்திவர் சுஹார்த்தோ என்பதாலும் அவரே இந்தோனேஷியாவின் பாழ்நிலைக்குக் காரணர் என்பதாலும் அந்த சூட்சும மர்மசக்தி அவரை அகற்றிவிட்டது. அவர்கள் நம்பியது வீண்போகவில்லை. ஆட்சியிலிருந்து சுஹார்த்தோவும் அவருடைய ஆட்களும் அகன்றனர். ஒரு கொடுங்கோன்மையான ஆட்சி நீங்கியது. இவ்வாறு அற்புதமான அதிசயமான விதத்தில் ப்ராம்பனான் கணேசர் தம்முடைய ஆற்றலை வெளிப்படுத்தி அரிய காரியத்தை சாதித்துவிட்டார்.

சிவ திருத்தலங்களும் தோஷ பரிகாரங்களும்

1. திருக்கச்சி ஏகம்பம்
காஞ்சிபுரத்தில் இருக்கும் மிக பழைய கோவில் காசிக்கு சமமாக கருதப்படுகிறது. இத்தலத்திற்கு மாமரமே தலமரம். இம்மரத்திற்கு நான்கு கிளைகள் உண்டு. கீழே விழும் கனிகளும் நான்குவித சுவை உடையதாகச் சொல்லப்படுகிறது. இம்மரம் வேதத்தைக் குறிக்கும். கிளைகள் நான்கு பிரிவினை குறிக்கின்றன. இதன் வயது ஏறக்குறைய 3600 ஆண்டுகளுக்கும் மேல் என்று சொல்லப்படுகின்றது. தவம் செய்த தேவிக்கு இங்கு தான் காட்சி கிடைக்கப் பெற்றதாக வரலாறு. எனவே இத்தலத்தில் இம்மரத்தின் அருகே உள்ள பிரகாரத்தில் கச்சி ஏகம்பனை நினைத்து மனஞபம் செய்தால் இப்பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொண்டு நன்மையை நல்குவார் என்பது வழக்கு.

2. மாகறல்
காஞ்சி – உத்திரமேரூர் பேருந்து சாலையில் உள்ளது. இத்தலம் முற்காலத்தில் அங்கபிரதட்சணம் செய்து குழந்தையில்லாதவர் குறை நீக்கப் பெற்று மகப்பேறு பெற்றனர் என்பது வரலாறு. திருமாறகலீசுவரர் இங்கு இறைவன். இவரை வணங்கி வழிபட்டால் மகப்பேறு பாக்கியம் நிச்சயம்.

3. திருவலிதாயம்
சென்னை ஆவடி சாலையில் உள்ள பாடி என்பதே திருவலிதாயம் ஆகும். இங்குள்ள வல்லீசுவரர் உடலில் நவகிரக குரு என்னும் தேவ குருவை ஏற்றுக் கொண்டவர். எனவே குரு கிரகத்தால் ஏற்படும் தீமைகள் குறைந்திடவும் குருவின் அனுக்கிரகம் கிட்டிடவும் இத்தலத்தின் இறைவனை வணங்கிடல் நலம்.

4. திருவான்மியூர்
சென்னையில் உள்ளது. பேருந்து வசதி உண்டு. உடல் சார்ந்த தொல்லைகள் தீர இங்கு எழுந்தருளியிருக்கும் திருமருந்தீசர் இறைவனை வணங்கி வழிபடுதல் நலம் பயக்கும்.

5. திருகாளத்தி
ஆந்திர மாநிலத்தில் உள்ளது. சென்னை காஞ்சியிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு.
பஞ்ச பூதத்தலங்களுள் இது வாயுத்தலம். திருகண்ணப்ப நாயனார் முக்தி பெற்ற தலம்.
இது முக்கியமாக இராகு, கேது தோச பரிகாரத்திற்கு உரிய தலமாகும். எனவே இராகு கால தரிசனமும் சாந்தியும் முக்கியம். கோயில் அமைப்பும் எதிர்வலம் கொண்டிருக்க இரகு கிரகத்திற்கு சிறந்த தலம் என்பது புலனாகும். மேலும் இங்கு எழுந்தருளியிருக்கும் திருக்காளத்திநாதர் பெற்ற கவசத்தில் நவக்கிரகங்கள் அங்கம் வகிக்கும் நவக்கிரக தோஷ நிவர்த்திக்கும் ஏற்ற தலமாகும்.
மற்றும் இங்கு வழிபாடு செய்வது மிக விசேஷமாகும். எனவே இராகு, கேது மூலம் திருமணத்தடைக்கு, உட்பட்டவர்களும், நாகதோஷம் கொண்டு புத்திர தோஷம் உள்ளவர்களும், ராகு திசை நடக்கும்போது ஏற்படும் தீமைகள் நீங்கவும், கோச்சாரத்தில் 8-ம் வீட்டில் இராகு சஞ்சரிக்க ஏற்படும் தீமைகள் நீங்கிடவும், மாங்கல்ய பலகீனம் உடைய பெண்களும் இங்கு வழிபடுதல் நலம்.

ஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:1. ஸ்ரீ சக்தி பஞ்சாக்ஷரீ – சகல யோகமும் சௌபாக்யமும் உண்டாக.
2. சுத்த பஞ்சாக்ஷரீ – மனோரத இஷ்ட காம்யார்த்த அபிலாக்ஷைகள் நிறைவேற.
3. சிவ அஷ்டாக்ஷரீ - ஸர்வ சத்ரு, மிருக, ரோக உபாதிகள் நீங்க.
4. சிவ பஞ்ச தசாக்ஷரீ – அஷ்ட ஐஸ்வர்யப் பிராப்தி அடைய.
5. சிதம்பர பஞ்சாக்ஷரீ – ஞான வைராக்யம், சிவ கடாக்ஷம் பெற.
6. குரு தாரக பஞ்சாக்ஷரீ – ஸகல ஜன வசீகரணம், ராஜாங்க வெற்றி, தேவதா ப்ரீதி உண்டாக.
7. ம்ருத்யுஞ்ஜய த்ரயக்ஷரீ – அகால, அபம்ருத்யு பயம் நீங்க, ஆயுள் விருத்தியடைய.
8. சிதம்பர சபாநடன மந்த்ரம் – அனைத்து பாப தோஷ பரிகாரம், ரக்ஷா பந்தனம்.
9. நீலகண்ட மந்த்ரம் – எதிர்பாராத கொடிய ஆபத்தினின்று மீளல், தவிர்த்துக் கொள்ள.
10. மஹா நீலகண்ட மந்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம்.
11. த்வனி மந்த்ரம் – மன சாந்தி, சந்தி, சந்துஷ்டி, சிவானந்த அநுபூதி பெற.
12. சிவ காயத்ரீ – நினைவுத்திறன், சமயோசித புத்தி, புதிய யுக்தி, வாக்சாதூர்யம் கூட.
13. மார்கதர்சீ சிவ மந்த்ரம் – பிரயாண சௌகர்யம், எவ்வித ஆபத்துகளும் விபத்துகளும் நேராதிருக்க.
14. ருணமோசன சிவ மந்த்ரம் – கடன் நீங்க, தேவ, பித்ரு ரிஷி கடன் அடைதல், பணவரவு, சேகரிப்பு அதிகரிக்க.
15. பசுபதி காயத்ரீ – ஸகல வித திருஷ்டி விலக, வழக்கில் வெற்றி, குடும்ப மகிழ்ச்சி ஏற்பட.
16. சிவ நவாக்ஷரீ - கார்யா தடைகள், தேக்கநிலை தீர்வு, நிர்வாகத் திறன் கூடுதல், புது முயற்சிகள் பலிதம்.
17. பாசுபதாஸ்த்ரம் – பூதப்பிரேத பிசாச உபத்ரவம், ஸர்வாரிஷ்டம் நிவாரணம், ஆபிசார தோஷம், செய்வினைகள் அகல.
18. ருத்ர காயத்ரீ – பாப தோஷ விமோசனம், நிரந்தர ஜயம்.
19. வித்யாப்ரத சிவமந்த்ரம் – புத்திகூர்மை, மேதா விலாஸம், சொல் வசீகரணம், ஸரஸ்வதி கடாக்ஷம் பெற.
20. உமாமஹேஸ்வர மந்த்ரம் – குடும்ப ஒற்றுமை அன்யோன்யம், மட்டற்ற மகிழ்ச்சி, குதூகலம் பெற.
21. ஆபத்துத்தாரக கௌரீவல்லப மந்த்ரம் – எல்லா ஆபத்துக்களும் தடைகளும் நீங்கி, நிரந்தர ஜயம் உண்டாக.
22. ஸர்வபாபஹர பவ மந்த்ரம் – அனைத்து பாப தோஷங்களும், அனாசார பாதிப்பும் விலகுதல்.
23. ரக்ஷாப்ரத கௌரீ சிவ மந்த்ரம் – சீரான உடல் நலம், முகப்பொலிவு, மறுமலர்ச்சி, ஆரோக்கியம் கூடுதல்.
24. ம்ருத் ஸஞ்சீவினி – அகால, அபம்ருத்யு பயம் நீங்கல், ஆயுள் விருத்தி.
25. பஞ்சதசீ சிவ மந்த்ரம் – ஸகல கார்ய சித்தி, செயற்கரிய செயல் செய்தல், வாழ்வில் ஏற்றம்.
26. சுதர்ஸன மந்த்ரம் – செய்வினை, சத்ருக்களின் தொல்லை, வியாபாரத் தடை நீங்குதல், மனச்சாந்தி அடைய.
27. லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி.
28. சுதர்ஸன நரஸிம்ஹ மந்த்ரம் – எதிரிகள் தொல்லை, வழக்கு வியாஜ்யம், குடும்ப-தொழில் குழப்பங்கள் நீங்க.
29. வாஸுதேவ மந்த்ரம் – வறுமை, கிலேசம், சந்தேகம், தீவினைகள் அகன்று இம்மை மறுமை நலன்கள் கொழிக்க.
30. விஸ்வரூப மந்த்ரம் – சதுர்வித புருஷார்த்தங்கள், மனோபலம், ஜயம், அசைகள் பூர்த்தியாக.
31. கந்தர்வராஜ மந்த்ரம் – தடை நீங்கி திருமணம், குடும்ப சூழ்நிலைச் சிக்கல்கள் நிவர்த்தி, சுப கார்யங்கள் நடைபெற.
32. ஹயக்ரீவ மந்த்ரம் – புத்தியும் சக்தியும் தூண்டப்படுதல், கல்வியில் ஏற்றம், மஹாவித்வத்வம், இனிய சொல் மெய்யுணர்வு.
33. நாமத்ரயம் – அனைத்து பாப விமோசனம், சுமுக சூழ்நிலை ஏற்பட.
34. சுதர்ஸன அபரோ மந்த்ரம் – ரக்ஷா ப்ரதானம், அடிமன பயம் நீங்குதல், மனநிறைவு, நிம்மதி.
35. நரஸிம்ஹ மந்த்ரம் – பணவரவு, கடன் நிவாரணம், பணப்புழக்கம், குடும்ப மகிழ்ச்சி, நோய் வறுமை நீங்கி ஸகல சம்பத்துகள் அடைய.
36. கருட மந்த்ரம் – விஷம், ஸர்ப்ப தோஷம், துஷ்ட மிருக பயம் விலக.
37. மஹா கருட மந்த்ரம் - அதைர்யம், பாபம், விஷக்ரஹ தோஷங்கள், துஷ்டர் பயம் ஆகியன விலக.
38. தன்வந்த்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை ஏற்பட.
39. கருட காயத்ரீ மந்த்ரம் – தாமதம் நீங்கி எண்ணிய காரியம் முடிதல், சீக்ர கார்யசித்தி பெற.
40. சுதர்ஸன காயத்ரீ மந்த்ரம் – ஞானம், சக்தி, பலம், ஐஸ்வர்யம், வீர்யம், தேஜஸ் பெற்று சௌகர்யம் ஏற்பட.
41. தன்வந்த்ரீ காயத்ரீ மந்த்ரம் – முதுமை, நோய், பய உணர்ச்சி அகன்று யௌவனம், தைர்யம், தேகஒளி, தீர்க்காயுஸ், ரோகமின்மை, மன்மதஸ்வரூபம் ஏற்பட.
42. வித்யா கோபால மந்த்ரம் – வித்யா பிராப்தி, நினைவாற்றல், வாக்குவன்மை, மேதா விலாசம் கூடுதல்.
43. அன்ன கோபால மந்த்ரம் – அன்னபானாதி சம்விருத்தி, தன்னிறைவு பெற.
44. சௌபாக்யலக்ஷ்மீ மந்த்ரம் – லக்ஷ்மி கடாக்ஷம், தாபத்ரய நிவர்த்தி, அஞ்ஞான நிவர்த்தி.
45. க்ஷேத்ர ப்ராப்திகர மந்த்ரம் – பூமி லாபம், குபேர சம்பத்து ஸ்திர லாபம் பெற.
46. க்ஷேத்ர ப்ராப்திகர அபேரா மந்த்ரம் – இந்த்ர பதவி, பொன் விளையும் பூமிக்கு அதிபதி, லோக பிரசித்தி, ஸ்திரத்தன்மை அடைய.
47. த்ருஷ்டி துர்கா மந்த்ரம் – ஸர்வ திருஷ்டி தோஷ பரிகாரம், முன்னேற்றம்.


ஹரிஹர மந்த்ரம்
“ஓம் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாரயணாய ஓம் ஓம் நமசிவாய”